தேர்தல் பறக்கும் படை அதிகாரியை மிரட்டியதாக அமைச்சர் கடம்பூர் ராஜு மீது 2 பிரிவுகளின் கீழ் வழக்கு

தேர்தல் பறக்கும் படை அதிகாரியை மிரட்டியதாக அமைச்சர் கடம்பூர் ராஜு மீது 2 பிரிவுகளின் கீழ் வழக்கு
Updated on
1 min read

கோவில்பட்டியில் தனது காரை சோதனையிட்டதால் தேர்தல்பறக்கும் படை அதிகாரியை மிரட்டியதாக அமைச்சர் கடம்பூர் ராஜு மீது 2 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி சட்டப்பேரவை தொகுதி தேர்தல் பறக்கும் படை அதிகாரியான நெடுஞ்சாலைத்துறை இளநிலை பொறியாளர் மாரிமுத்து, சிறப்பு எஸ்ஐ முருகன் மற்றும் குழுவினர் கடந்த 12-ம் தேதி கோவில்பட்டி அருகே ஊத்துப்பட்டி பகுதியில் வாகனசோதனையில் ஈடுபட்டிருந்த னர்.

அப்போது அந்த வழியாக கோவில்பட்டி சட்டப்பேரவை தொகுதி அதிமுக வேட்பாளரான அமைச்சர் கடம்பூர் செ.ராஜு காரில் வந்தார். அவரது காரையும், அவருடன் வந்த அதிமுக நிர்வாகிகள் காரையும் பறக்கும் படைஅதிகாரிகள் நிறுத்தி சோதனை மேற்கொண்டனர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து அவர்கள் வாக்குவாதம் செய்ததாகக் கூறப்படுகிறது.

இடமாற்ற மிரட்டல்

இதுகுறித்து நாலாட்டின்புதூர் காவல் நிலையத்தில் பறக்கும்படை அதிகாரி மாரிமுத்து அளித்த புகாரில், வாகன சோதனையின்போது அமைச்சர் கடம்பூர் ராஜு தன்னை பணி செய்ய விடாமல் தடுத்ததாகவும், 10 நாட்களில் இடமாற்றம் செய்து விடுவேன் என மிரட்டியதாகவும் தெரிவித்துள்ளார்.

போலீஸார் விசாரணை நடத்தி, அமைச்சர் கடம்பூர் ராஜு மீது மிரட்டியது, அரசுபணி செய்ய விடாமல் தடுத்தது ஆகிய 2 பிரிவுகளின் கீழ் நேற்று வழக்குப்பதிவு செய்தனர். இதனிடையே, நேற்று முன்தினம் மாரிமுத்து விளாத்திகுளம் தொகுதிக்கு மாற்றம் செய்யப்பட்டதாகவும், ஆனால், இந்த விவகாரம்வெளியே கசிந்ததை தொடர்ந்து நேற்று மீண்டும்அவர் கோவில்பட்டி தொகுதிக்கு மாற்றப்பட்டதாகவும் கூறப்படுகிறது.

ஏற்கெனவே சோதனை

அமைச்சர் கடம்பூர் ராஜு கடந்த 2-ம் தேதி கழுகுமலை கழுகாசலமூர்த்தி கோயிலில் தரிசனம் செய்துவிட்டு பிரச்சாரத்தை தொடங்கச் சென்றபோது, கழுகுமலை அருகேஅண்ணா புதுத்தெரு பகுதியில் அமைச்சருடன் வந்தவர்களின் வாகனங்களை நிறுத்தி,மாரிமுத்து தலைமையி லான குழுவினர் சோதனையிட்டுள் ளனர். அப்போது, அமைச்சர் தனது உதவியாளர் மூலம் அவரை அழைத்து பேச முயன்றதாகவும், ஆனால் மாரிமுத்து அமைச்சருடன் பேச மறுத்துவிட்டதாகவும் கூறப்படுகிறது.

தேர்தல் அலுவலர் மறுப்பு

இந்நிலையில் தூத்துக்குடி மாவட்ட தேர்தல் அலுவலரான ஆட்சியர் கி.செந்தில் ராஜ்வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், ‘தூத்துக்குடி மாவட்டத்தில் தேர்தலுக்காக நியமிக்கப்பட்டுள்ள கண்காணிப்புக் குழுவினர் எவ்விதமாற்றமும் இன்றி தாங்கள் ஏற்கெனவே பணிபுரிந்தசட்டப்பேரவை தொகுதிகளி லேயே கண்காணிப்பு பணிகளை மேற்கொண்டு வருகின்ற னர்’ எனத் தெரிவித்துள்ளார்

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in