

சென்னையில், விலைப் பட்டியல் இல்லாமல் கொண்டு செல்லப்பட்ட கூம்பு வடிவ ஒலிபெருக்கிகள், கார் ஸ்பீக்கர்கள் மற்றும் செல்போன்களை ஜிஎஸ்டி மற்றும் மத்திய கலால் வரித் துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
சென்னை அண்ணா சாலை பகுதியில் சோதனையில் ஈடுபட்ட கள அதிகாரிகள்,விலைப் பட்டியல் இல்லாமல் கொண்டு செல்லப்பட்ட கூம்பு வடிவ ஒலிபெருக்கிகள்,கார் ஸ்பீக்கர்கள் மற்றும் பிரபல நிறுவனங்களின் செல்போன்களை பறிமுதல் செய்தனர்.
இவற்றின் மதிப்பு ரூ.30லட்சம் வரை இருக்கும் என்று கூறப்படுகிறது. இது தொடர்பாக மேலும் விசாரணை நடந்து வருவதாக, வட சென்னை ஜிஎஸ்டி மற்றும் மத்திய கலால் வரித்துறை மக்கள் தொடர்பு அதிகாரி என்.ஆர். ராஜ்குமார் தெரிவித்துள்ளார்.