

விழுப்புரத்தில் அதிக வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்று வரலாறு படைக்க வேண்டும் என்று திமுகவினருக்கு பொன்முடி அறிவுரை வழங்கினார்.
விழுப்புரத்தில் நேற்று திமுக வேட்பாளர் லட்சுமணனை அறிமு கம் செய்து திமுக துணை பொதுச் செயலாளர் க. பொன்முடி பேசி யது: தமிழகத்திலேயே விழுப்புரம் தொகுதியில் திமுக அதிக வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்று சி.வி சண்முகத்தை தோற்கடித்தோம் என்ற வரலாறு படைக்க வேண் டும். விழுப்புரம் நகருக்கு திமுகஆட்சிக்காலத்தில்தான் ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகம், ஆட்சியர் அலுவலக பெருந்திட்டவளாகம், அண்ணா பல்கலைக்கழ கம், மருத்துவக்கல்லூரி உள்ளிட்ட வைகள் கொண்டு வரப்பட்டன. தற்போதைய அதிமுக ஆட்சியில் ரூ. 25 கோடியில் கட்டப்பட்ட தடுப்பணை ஒரே மாதத்தில் இடிந் ததை அனைவரும் அறிவீர்கள் என்று தெரிவித்தார்.
இக்கூட்டத்தில் திமுக மாவட்ட செயலாளரான விக்கிரவாண்டி திமுக வேட்பாளர் புகழேந்தி, இந்திய கம்யூனிஸ்ட் ஏ.வி. சரவ ணன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் ராமமூர்த்தி, விடுதலை சிறுத்தை கள் ஆற்றலரசு, காங்கிரஸ் சார் பில் வழக்கறிஞர் தயானந்தம், திமுக மாவட்ட அவைத்தலைவர் ஜெயச்சந்திரன், துணை செயலா ளர்கள் புஷ்பராஜ், முருகன், பொருளாளர் ஜனகராஜ் உள்ளிட்ட கூட்டணிக் கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
தமிழகத்திலேயே விழுப்புரம் தொகுதியில் திமுக அதிக வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற வேண்டும்.