செஞ்சி தொகுதியில் சர்ச்சைக்குள்ளான சுவர் விளம்பரம்

செஞ்சி அருகே மேலச்சேரி கிராமத்தில் வரையப்பட்ட சுவர் விளம்பரம்.
செஞ்சி அருகே மேலச்சேரி கிராமத்தில் வரையப்பட்ட சுவர் விளம்பரம்.
Updated on
1 min read

செஞ்சி தொகுதியில் வரையப்பட்டுள்ள சுவர் விளம்பரம் சர்ச்சைக்குள்ளாகியுள்ளது.

செஞ்சி தொகுதியில் திமுக சார்பில் கே எஸ் மஸ்தான், அதிமுக கூட்டணியில் பாமக சார்பில் மே.பெ.சி ராஜேந்திரனும் போட்டியிடுகின்றனர். நகராட்சி,பேரூராட்சி பகுதிகளில் சுவர் விளம்பரங்களுக்கு தேர்தல் ஆணையம் தடை விதித்துள்ளது. இந்நிலையில் கிராமங்களில் வீட்டு உரிமையாளர் அனுமதியுடன் தேர்தல் சுவர் விளம்பரம் செய்து கொள்ளலாம் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

இதற்கிடையே திமுக வெளியிட்ட தேர்தல் அறிக்கையில்’ பூரண மதுவிலக்கு குறித்து எவ்வித வாக்குறுதியும் அளிக்கவில்லை என விமர்சனம் எழுந்துள்ளது. இந்நிலையில் செஞ்சி தொகுதியில் உள்ள ஒரு கிராமத்தில் திமுகவினர் எழுதிய சுவர் விளம்பரத்தில் “ 110 விலையில் மதுபான பாட்டில் வழங்கப்படும் சின்னம் உதயசூரியன் வாக்களிப்பீர்” என்ற வாசகம் இடம் பெற்று சர்ச்சைக்குள்ளாகியுள்ளது. பூரண மதுவிலக்கு அமல்படுத்தவேண்டும் என நீண்ட காலமாக வலியுறுத்திவரும் பாமக போட்டியிடும் தொகுதியில் இப்படி ஒரு விளம்பரமா? என செஞ்சி பகுதியில் உள்ள சமூக வலைதளங்களில் பரபரப்பாக விவாதிக்கப்பட்டு வருகிறது.

இதுகுறித்து செஞ்சி திமுக ஒன்றிய செயலாளர் விஜயகுமாரிடம் கேட்டபோது, "செஞ்சி அருகே மேலச்சேரி கிராமத்தில் யாரோ இப்படி எழுதியுள்ளனர். இதை உடனே அழிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது" என்றனர். மேலும் இது குறித்து பாமக மாவட்ட துணை செயலாளர் ஜெயகுமாரை கேட்டபோது, "இந்த விளம்பரத்திற்கும் எங்களுக்கும் எவ்வித தொடர்பும் இல்லை. அரசியலை நாகரீகமாக செய்யும் கட்சி பாமக. இப்படிப்பட்ட கீழ்தரமான பணிகளை எங்கள் கூட்டணிக்கட்சியினரும் செய்ய மாட்டார்கள்" என்றார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in