அதிமுகவின் இலவச வாஷிங் மெஷின் அறிவிப்பு பெண் வாக்காளர்களை கவருமா?

அதிமுகவின் இலவச வாஷிங் மெஷின் அறிவிப்பு பெண் வாக்காளர்களை கவருமா?
Updated on
1 min read

அதிமுகவின் இலவச வாஷிங் மெஷின் அறிவிப்பு பெண் வாக்காளர்களை கவருமா என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.

தேர்தலில் வாக்குகளைக் கவர கடந்த 2006 சட்டப் பேரவைத் தேர்தலில் திமுக தலைவர் கருணாநிதி ரேஷன் கார்டுதாரர்களுக்கு இலவச கலர் டி.வி. வழங்கப்படும் என அறிவித்தார். இதை அதிமுக உட்பட எதிர்க்கட்சிகள் அப்போது கடுமையாக விமர்சித்தன. இலவச டிவி வழங்குவது சாத்தியமே இல்லை என மேடைக்கு மேடை முழங்கினர்.

ஆனால், அந்த தேர்தலில் திமுக வெற்றி பெற்று ஆட்சியைப் பிடித்து அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் இலவச கலர் டிவிக்களை வழங்கியது. அதற்கு அடுத்த தேர்தலில் அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா இலவச பொருட்கள் அறிவிப்பை வெளியிட்டார். அவர் மிக்ஸி, கிரைண்டர், மின்விசிறி வழங்கப்படும் என்றார். அதன்படி அதிமுகவும் வெற்றி பெற்று குடும்ப அட்டைதாரர்களுக்கு இப்பொருட்கள் வழங்கப்பட்டன.

2016 தேர்தலில் பரிசுப் பொருட்கள் வழங்குவதற்குப் பதிலாக குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசாக ரூ.100 மற்றும் பச்சரிசி, கரும்பு அடங்கிய பொருட்கள் அறிவிப்பாக வெளியிடப்பட்டது. ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு பொங்கல் பரிசுத்தொகுப்பில் வழங்கப்படும் பணம் ரூ.500, ரூ.1000, ரூ.2500 என உயர்த்தி வழங்கப்பட்டது.

தற்போதைய தேர்தல் வாக்குறுதிகளாக திமுக சார்பில் பொங்கல் பரிசுத் தொகை உயர்த்தி வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டது. அதே நேரம் அதிமுக தேர்தல் வாக்குறுதியில் இலவச வாஷிங்மெஷின் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பு பெண் வாக்காளர்களைக்கவருமா என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in