திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி அருகே பாதூர் ஊராட்சியில் தேர்தல் புறக்கணிக்க முடிவு: வீடுகளில் கருப்பு கொடி ஏற்றி முழக்கம்

வந்தவாசி அடுத்த பாதூர் ஊராட்சியில் தேர்தல் புறக்கணிப்பை அறிவித்து வீடுகளில் கருப்பு கொடி ஏற்றப்பட்டது.
வந்தவாசி அடுத்த பாதூர் ஊராட்சியில் தேர்தல் புறக்கணிப்பை அறிவித்து வீடுகளில் கருப்பு கொடி ஏற்றப்பட்டது.
Updated on
1 min read

வந்தவாசி அருகே பாதூர் ஊராட்சியில் ஆரம்ப சுகாதார நிலையம் அமைக்காததைக் கண்டித்து தேர்தல் புறக்கணிப்பில் ஈடுபடுவ தாக கூறி வீடுகளில் கருப்பு கொடி ஏற்றி கிராம மக்கள் நேற்று போராட் டத்தில் ஈடுபட்டனர்.

திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி அடுத்த பாதூர் ஊராட்சியில் அடிப்படை வசதிகள் மற்றும் மருத்துவ சேவை ஆகியவற்றை செய்து கொடுக்க வேண்டும் என பல ஆண்டுகளாக கிராம மக்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர். அவர்களது கோரிக்கையை நிறைவேற்ற ஆட்சி யாளர்கள் மற்றும் அதிகாரிகள் முன்வரவில்லை என குற்றச்சாட்டு உள்ளது.

இந்நிலையில், தங்களது கோரிக் கையை நிறைவேற்றாததைக் கண்டித்து தேர்தல் புறக்கணிப் பில் ஈடுபடப் போவதாக அறிவித்து நேற்று கருப்பு கொடி போராட்டத்தில் ஈடுபட்டனர். பின்னர், வீடுகளில் கருப்பு கொடி ஏற்றி தங்களது எதிர்ப்பை பதிவு செய்தனர்.

அப்போது அவர்கள் கூறும் போது, “மருத்துவ சிகிச்சைக்காக பல கி.மீ., தொலைவு செல்ல வேண்டி இருப்பதால், பாதூர் ஊராட்சியில் ஆரம்ப சுகாதார நிலையம் அமைத்து கொடுக்க வேண்டும். கால்நடைகளை பாது காக்க கால்நடை மருத்துவமனை அமைக்க வேண்டும். பிரதான பகுதிகளில் இருந்து எங்கள் கிராமத்துக்கு மினி பேருந்துகளை இயக்க வேண்டும். சீரான குடிநீர் மற்றும் தடையில்லா மின்சாரம் வழங்க வேண்டும். எங்களது கோரிக்கைகளை பல ஆண்டுகளாக நிறைவேற்றவில்லை. அதனால், வரும் ஏப்ரல் 6-ம் தேதி நடைபெற உள்ள சட்டப்பேரவைத் தேர்தலை புறக்கணிக்க முடிவு செய்துள்ளோம்” என்றனர். மேலும், அவர்கள் பதாகைகளை பிடித்து கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கமிட்டனர்.

இதுகுறித்து தகவலறிந்த வட்டாட்சியர் திருநாவுக்கரசு உள்ளிட்டவர்கள் சம்பவ இடத்துக்கு சென்று கிராம மக்களுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். அப்போது அவர்கள், உங்களது கோரிக்கைகளை நிறைவேற்ற மாவட்ட நிர்வாகத்துக்கு பரிந்துரை செய்யப்படும் என தெரிவித்தனர். இதனையேற்று, போராட்டம் முடிவுக்கு வந்தது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in