இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர் அறிவிப்பு: ஆறுமுகம், தளி ராமச்சந்திரன், குணசேகரனுக்கு மீண்டும் வாய்ப்பு
திமுக கூட்டணியில் உள்ள இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. இதில் முன்னாள் சட்டப்பேரவைத் தலைவர் ஆறுமுகம், தளி ராமச்சந்திரன், குணசேகரனுக்கு வாய்ப்பளிக்கப்பட்டுள்ளது.
திமுக கூட்டணியில் உள்ள இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு 6 தொகுதிகள் ஒதுக்கப்பட்டது. 12 தொகுதிகள் கேட்ட நிலையில் அனைவருக்கும் ஆறு தொகுதிகள் என்பதால் 6 தொகுதிகள் மட்டுமே என அறிவிக்கப்பட்டது. இதையடுத்து எண்ணிக்கை முக்கியமல்ல மதச்சார்பற்ற கூட்டணி வெல்லும் லட்சியமே முக்கியம் என முத்தரசன் பேட்டி அளித்து ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டார். அதன்படி இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர்களை இறுதிப்படுத்தி இன்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் வேட்பாளர்கள் பட்டியல் விவரம் வருமாறு:
1. திருத்துறைபூண்டி - மாரிமுத்து
2. தளி - ராமச்சந்திரன்
3. திருப்பூர் வடக்கு - ரவி (எ) சுப்பிரமணியன்
4. பவானிசாகர் - சுந்தரம்
5. வால்பாறை - ஆறுமுகம்
6. சிவகங்கை - குணசேகரன்
இவ்வாறு அறிவிக்கப்பட்டுள்ளது.
