

தேர்தல் நிலை கண்காணிப்புக் குழு வினர் நடத்திய வாகனச் சோதனைகளில் ஆவணங்கள் இன்றி கொண்டு வரப் பட்ட 250.34 கிலோ நகைகள் பறிமுதல் செய்யப்பட்டன. இவற்றின் மதிப்பு ரூ.42.53 கோடியாகும்.
சேலம் மாவட்டம் கெங்கவல்லி (தனி) சட்டப்பேரவைத் தொகுதிக்கு உட்பட்ட தலைவாசலில் சேலம் - சென்னை 4 வழிச்சாலையில் நேற்று முன்தினம் இரவு தேர்தல் நிலை கண்காணிப்புக் குழுவினர் கண்காணிப்பில் ஈடுபட்டி ருந்தனர்.
அப்போது, சென்னையில் இருந்து சேலம் நோக்கி வந்த வேனை சோதனையிட்டதில் ஆவணங்கள் இன்றி 237.344 கிலோ தங்க நகைகள் இருந்தன. இவற்றை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். இதன் மதிப்பு சுமார் ரூ.36.57 கோடியாகும்.
இதுதொடர்பாக தேர்தல் பிரிவு அலுவலர்கள் கூறும்போது, ‘‘தனியார் நகை உற்பத்தி நிறுவனம் சார்பில் நகைகள் எடுத்துச் செல்லப்படுவதாக வேனில் வந்த ராஜேஷ் என்பவர் தெரிவித்தார். எனினும், ஆவணங்கள் இல் லாததால், பறிமுதல் செய்து நகைகளை கருவூலத்தில் வைத்துள்ளோம். வருமான வரித்துறைக்கும் தகவல் தெரிவித்துள்ளோம்” என்றனர்.
மன்னார்குடி அருகே..
இதேபோல் மன்னார்குடி அருகே நடந்த சோதனையின்போது, தஞ்சை யிலிருந்து சேலம் நோக்கிச் சென்ற சிறிய ரக கன்டெய்னர் வாகனத்தை போலீஸார் சோதனை செய்தனர். அதில், 18 பெட்டிகளில் 13 கிலோ தங்கம், 51 கிலோ வெள்ளி நகைகள் இருந்தன. இவற்றின் மதிப்பு ரூ.5.96 கோடி ஆகும். விசாரணையில், சேலத்தில் உள்ள தனியார் நிறுவனம் தஞ்சாவூர், திருவாரூர், நாகை மாவட்டங் களில் உள்ள நகைக் கடைகளில் பழைய நகைகளை வாங்கிவிட்டு, புதிய நகைகளை விற்பனை செய்து வருவதாகவும் அவ்வாறு தஞ்சாவூரில் வாங்கப்பட்ட நகைகளுடன் சேலத்துக்கு செல்வதாகவும் தெரிவித்தனர்.
அதற்கு உரிய ஆவணங்கள் இருந்தும், தேர்தல் ஆணையத்தில் உரிய அனுமதி பெறாததால் அவற்றை போலீஸார் பறிமுதல் செய்து, மன் னார்குடி கோட்டாட்சியர் அழகர்சாமி யிடம் ஒப்படைத்தனர்.