

சென்னையில் போர்க்கால அடிப் படையில் மழை நிவாரணப்பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும், ஐஏஎஸ் அதிகாரிகள் தலைமையில் சிறப்புக்குழுக்கள் அமைக்கப்பட்டு பணிகள் தொடர்ந்து கண்காணிக் கப்பட்டு வருவதாகவும் மாநகராட்சி அறிவித்துள்ளது.
இதுதொடர்பாக சென்னை மாநகராட்சி நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது:-
பருவகால மழையின் நிவாரணப் பணிகளை போர்க்கால அடிப்படை யில் மேற்கொண்டு பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்படாத வகையில் செயல்பட முதல்வர் ஜெயலலிதா ஆணையிட்டுள்ளார். அதன்படி, மாநகராட்சியில் பணிகள் நடைபெற்று வருகின்றன. 15 மண்டலங்களிலும் ஐஏஎஸ் அதிகாரி கள் மற்றும் மூத்த அதிகாரிகள் தலைமையில் சிறப்புக்குழுக்கள் அமைக்கப்பட்டு தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருகிறது.
மழைநீர் தேங்கும் இடங்கள் கண்டறியப்பட்டு அங்கு பம்ப் செட்டு கள் தயார்நிலையில் வைக்கப்பட் டிருப்பதால் மழைநீர் உடனுக்குடன் அகற்றப்படுகின்றன.
மழைநீர் வடிகால்வாய்களில் ஏற்படும் அடைப்புகளை அகற்ற உயர் அழுத்த உறிஞ்சு இயந்திரங்கள் பயன்படுத்தப்படுகின்றன. ஆங் காங்கே தேங்கும் மழைநீரை உடனுக் குடன் வெளியேற்ற 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட களப்பணியாளர்கள் பணியில் உள்ளனர்.
மழைநீர் புகுந்ததால் பாதிக்கப் பட்ட குடும்பங்களுக்கு 37,900 உணவு பொட்டலங்களும், 5,300 ரொட்டி பொட்டலங்களும் வழங்கப்பட்டுள் ளன. முன்னேற்பாடு காரணமாக, புதிதாக போடப்பட்ட 194 பேருந்து சாலைகள் மற்றும் சுரங்கப்பாதை களில் மழைநீர் தேங்குவது முழு வதுமாக தடுக்கப்பட்டுள்ளது. மழை பெய்த பின்பு அதிகபட்சம் இரண்டரை மணி நேரத்துக்குள் அனைத்து சாலைகளிலும் தொடர்ந்து மழைநீர் தேங்காதவாறு நடவடிக்கை எடுக்கப்படுகிறது.
தொடர் மழை காரணமாக தொற்று நோய்கள் ஏற்படாத வண்ணம் நேற்று 41 சிறப்பு மருத்துவ முகாம்கள் நடத்தப்பட்டன. இதன் மூலம் 4,899 பேர் பரிசோதிக்கப்பட்டனர். தேவைப்பட்ட நபர்களுக்கு உப்பு, சர்க்கரை கரைசல் பாக்கெட்டுகள் வழங்கப்பட்டன.
தூய்மை பராமரிப்பு, கொசுப்புழு உற்பத்தியை தடுப்பது போன்றவை குறித்து விழிப் புணர்வு ஏற்படுத்தும் வகையில் துண்டுபிரசுரங்கள் வழங்கப்பட்டன. அனைத்து மருத்துவ முகாம்களிலும், பொதுமக்களுக்கு இலவசமாக நிலவேம்பு குடிநீர் பாக்கெட்டுகளும் வழங்கப்பட்டன.
இவ்வாறு அதில் கூறப்பட் டுள்ளது.