தேர்தலில் தொகுதி மாறி போட்டியிடுவது ஏன்? - அமைச்சர் கே.டி.ராஜேந்திர பாலாஜி விளக்கம்

ராஜபாளையத்தில் தேர்தல் பிரச்சாரத்தைத் தொடங்கிய அதிமுக வேட்பாளர்  கே.டி.ராஜேந்திர பாலாஜி.
ராஜபாளையத்தில் தேர்தல் பிரச்சாரத்தைத் தொடங்கிய அதிமுக வேட்பாளர் கே.டி.ராஜேந்திர பாலாஜி.
Updated on
1 min read

அமாவாசை தினத்தில் நல்ல நேரம் பார்த்து கோயிலில் வழி பாடு நடத்தி அதிமுக வேட் பாளர் கே.டி.ராஜேந்திர பாலாஜி ராஜபாளையத்தில் பிரச்சாரத்தைத் தொடங்கினார். கட்சி நிர்வாகிகள் கேட்டுக் கொண்டதால் இத்தொகுதியில் போட்டியிடுவதாக அவர் தெரிவித்தார்.

ராஜபாளையம் சட்டப்பேரவைத் தேர்தலில் அதிமுக சார்பில் அமைச்சர் கே.டி.ராஜேந்திர பாலாஜி போட்டியிடுகிறார். நேற்று முன்தினம் மாலை அமாவாசையில் நல்ல நேரம் பார்த்து புதுப்பாளையம் மாரியம்மன் கோயிலில் தரிசனம் செய்த பின் தேர்தல் பிரச்சாரத்தைத் தொடங்கினார்.

பின்னர் ராஜபாளையம் நகரில் உள்ள பசும்பொன் முத்து ராம லிங்கத் தேவர், மகாத்மா காந்தி, நேரு, அம்பேத்கர், பி.எஸ்.குமார சாமி ராஜா, காமராஜர், அண்ணா, பி.ஏ.சி.ராமசாமி ராஜா, வ.உ.சி., இமானுவேல்சேகரன் ஆகிய தலைவர்களின் சிலைகளுக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

தேர்தல் பிரச்சாரத்தின்போது ராஜேந்திர பாலாஜி பேசியதாவது: அமாவாசை நல்ல நேரம் பார்த்து மாலை 5 மணிக்கு எனது தேர்தல் பிரச்சாரத்தைத் தொடங்கி உள்ளேன். எம்ஜிஆர், ஜெயலலிதா பொற்கால ஆட்சிக்கு உங்கள் வீட்டு பிள்ளையான எனக்கு இரட்டை இலை சின்னத்தில் வாக்களித்து வெற்றி பெறச் செய்யுங்கள். நான் இருக்கிற பகுதி மட்டுமல்ல நான் செல்கின்ற பகுதியும் நன்றாக இருக்க வேண்டும்.

ஏன் சொந்த தொகுதியில் நிற்க வில்லை என்று சிலர் கேட்கின்றனர். எனது சொந்தத் தொகுதி சிவகாசி என்றாலும் எனது சொந்தக்காரத் தொகுதி ராஜபாளையம். எனவே, எனது சொந்தக்காரத் தொகுதியில் நான் போட்டியிடுகிறேன். இங்கு எனக்கு வீடு, விவசாய நிலங்கள் இருக்கின்றன. வாரத்தில் 3 நாட்கள் இங்கு வந்துகொண்டுதான் இருக் கிறேன். நான் 15 ஆண்டுகள் திருத் தங்கல் நகராட்சியில் துணைத் தலைவராகவும், 10 ஆண்டுகள் அமைச்சராகவும் பணியாற்றி உள்ளேன். இந்த முறை ராஜ பாளையம் சட்டப் பேரவைத் தொகுதியில் பணியாற்ற வேண்டும் என கட்சி நிர்வாகிகள் கேட்டுக்கொண்டனர். அவர்களின் விருப்பத்தின் பேரிலும், ராஜ பாளையம் பகுதியின் வளர்ச்சிக் காகவும் இந்த தொகுதியில் நான் போட்டியிடுகிறேன்.

இவ்வாறு அவர் பேசினார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in