

ராமநாதபுரம் சட்டப்பேரவைத் தொகுதி யில் கடந்த தேர்தலில் அதிமுக மாநில மருத்துவர் அணி துணைச் செயலாளரான எம்.மணிகண்டன் போட்டியிட்டு எம்.எல்.ஏ.ஆனார். முதல் முறையாக வெற்றிபெற்று தகவல் தொழில்நுட்ப அமைச்சராகவும் நியமிக்கப்பட்டார்.
இந்நிலையில், 2019-ல் திடீரென மணிகண்டன் அமைச்சர் பதவியில் இருந்து நீக்கப்பட்டார். அவரது இலாகா வருவாய்த்துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமாரிடம் ஒப்படைக்கப் பட்டது.
இந்நிலையில் தனக்குப் போட்டியிட வாய்ப்பு வழங்க வேண்டும் என சென் னையிலேயே கடந்த 10 நாட்களுக்கும் மேலாகத் தங்கியிருந்து முதல்வர் கே.பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோரைச் சந்தித்தார். இருந்தபோதும் வெளியான பட்டியலில் மணிகண்டனின் பெயர் இடம் பெறவில்லை. அமைச்சராகவும், எம்எல்ஏவாகவும் இருந்த மணிகண் டனுக்கு இடம் வழங்காமல், ராமநாதபுரம் தொகுதி பாஜகவுக்கு ஒதுக்கப்பட்டு விட் டது.
மேலும் அதிமுகவில் மூத்த அரசியல் வாதியும், அதிமுக மாநில சிறுபான்மைப் பிரிவுச் செயலாளரும், முன்னாள் அமைச்சரும், முன்னாள் எம்பியுமான அ.அன்வர்ராஜாவுக்கும் போட்டியிட வாய்ப்பு வழங்கப்படவில்லை. இவர் தனக்கு ராமநாதபுரம் அல்லது திரு வாடானை தொகுதியில் வாய்ப்பு கேட்டு முதல்வர், துணை முதல்வரை சந்தித்து, கடந்த ஒரு வாரத்துக்கும் மேலாக சென்னையிலேயே தங்கியிருந்தார்.
இவருக்கும் சீட் வழங்கப்படவில்லை. திருவாடானை தொகுதி கே.சி.ஆணி முத்துவிற்கு வழங்கப்பட்டுள்ளது. ராம நாதபுரம் பாஜகவுக்கு ஒதுக்கப்பட் டுள்ளது. இதனால் அன்வர்ராஜாவும் சீட் கிடைக்காமல் ஏமாற்றம் அடைந் துள்ளார்.