Published : 14 Mar 2021 03:16 AM
Last Updated : 14 Mar 2021 03:16 AM

பாஜக, காங்கிரஸ் நேரடி போட்டியால் தேசிய அரசியல் களமாக மாறிய காரைக்குடி தொகுதி

காரைக்குடி

தேசிய அரசியல் களமாக காரைக்குடி தொகுதி மாறியுள்ளது.

சிவகங்கை மாவட்டம், காரைக்குடி தொகுதி அதிமுக கூட்டணியில் பாஜ கவுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. பாஜகவை பொறுத்தவரை மூத்த தலைவர் ஹெச்.ராஜாவை வேட்பாளராக அறிவிக்க வாய்ப்புள்ளது. இவர் ஏற்கெனவே 2001-ம் ஆண்டு காரைக்குடி தொகுதியில் திமுக கூட்டணியில் வெற்றி பெற்றவர்.

மேலும் இவர் 2019-ம் ஆண்டு நடந்த மக்களவைத் தேர்தலில் அதி முக கூட்டணியில் நின்று காங் கிரஸ் வேட் பாளர் கார்த்தி சிதம்பரத்திடம் தோற்றார். மேலும் திமுக கூட்டணியில் காரைக்குடி மீண்டும் காங்கிரஸூக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. ஏற்கெனவே, இத் தொகுதி எம்எல்ஏவாக காங்கிரஸை சேர்ந்த கே.ஆர்.ராமசாமி உள்ளார். இந்தத் தேர்தலில் போட்டியிட தொழி லதிபர் படிக்காசு மகன் பாலு, வேலுச்சாமி, சங்கராபுரம் முன்னாள் ஊராட்சித் தலைவர் மாங்குடி உள்ளிட்டோர் சீட் கேட்டுள்ளனர். இந்தத் தொகுதியில் பாஜக, காங்கிரஸ் நேரடியாக மோது வதால், சிவகங்கை மக்களவைத் தொகுதியைப் போன்று காரைக்குடி தொகுதியும் தேசிய அரசியல் களமாக மாறியுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x