

இந்தியாவின் ‘ஜிசாட்-15’ என்ற புதிய தொலைதொடர்பு செயற்கைக் கோள் வரும் 10-ம் தேதி தீபா வளித் திருநாளன்று ‘ஏரியன்-5’ ராக்கெட் மூலம் விண்ணில் செலுத் தப்படுகிறது.
இந்திய விண்வெளி ஆய்வு மையம் (இஸ்ரோ) ‘ஜிசாட் 14’ என்ற செயற்கைக் கோளை கடந்த ஆண்டு ஜனவரி மாதம் விண்ணில் ஏவியது. இதைத்தொடர்ந்து, ‘ஜிசாட் 15’ என்ற புதிய தொலைதொடர்பு செயற் கைக் கோளை இஸ்ரோ விஞ்ஞானி கள் உருவாக்கி உள்ளனர். இது வரும் 10 ம் தேதி தீபாவளியன்று ‘ஏரியன் 5’ ராக்கெட் மூலம் தென் அமெரிக்க கண்டத்தில் பிரான்ஸ் நாட்டுக்கு சொந்தமான பிரெஞ்சு கயானாவில் இருந்து விண்ணில் செலுத்தப்படுகிறது.
‘ஜிசாட் 15’ செயற்கைக் கோளுடன் அரபு நாடுகளின் ‘அராப்சாட் 6பி’ என்ற செயற்கைக் கோளும் விண்ணில் செலுத்தப்பட உள்ளது. இது மத்திய கிழக்கு மற்றும் ஆப்பிரிக்க நாடுகளின் தொலைதொடர்பு, தொலைக்காட்சி ஒளிபரப்பு பணிக்காக விண்ணில் ஏவப்படுகிறது.
இஸ்ரோ விஞ்ஞானிகள் தயாரித் துள்ள ஜிசாட் 15 செயற்கைக் கோள் இந்தியாவின் தொலைதொடர்பு சேவையை மேம்படுத்த உதவியாக இருக்கும். இதில் சி, க்யூ பாண்டு கள் வைக்கப்பட்டுள்ளன. 3,164 கிலோ எடை கொண்ட இந்த செயற் கைக் கோள் சுமார் 12 ஆண்டு கள் விண்ணில் சுற்றி, தொலை தொடர்புக்கான சிக்னல்களை வழங் கும். கடந்த 2003 ஏப்ரலில் ஏவப்பட்ட இன்சாட் 3ஏ செயற்கைக் கோளின் 12 ஆண்டுகால ஆயுட்காலம் சமீபத்தில் முடிவுக்கு வந்தது. 2007 மார்ச்சில் செலுத்தப்பட்ட இன்சாட் 4பி செயற்கைக் கோளில் சோலார் பேனல்கள் பாதிக்கப்பட்டதால், அதன் இயக்கம் பாதியாக குறைந்துள்ளது. இந்த இரண்டு செயற்கைக் கோள்களுக்கும் மாற்றாக இனி ஜிசாட்-15 செயல்படும்.