நான்கு தேர்தல்களுக்கு பிறகு ராமநாதபுரத்தில் களமிறங்கும் திமுக

காதர்பாட்சா முத்துராமலிங்கம்
காதர்பாட்சா முத்துராமலிங்கம்
Updated on
1 min read

நான்கு தேர்தல்களுக்குப் பிறகு ராம நாதபுரம் சட்டப்பேரவைத் தொகுதியில் திமுக மறுபடியும் களமிறங்குகிறது.

ராமநாதபுரம் மாவட்டத்தில் பரமக் குடி (தனி), திருவாடானை, ராம நாதபுரம், முதுகுளத்தூர் ஆகிய 4 சட்டப்பேரவைத் தொகுதிகள் உள்ளன. இதில் ராமநாதபுரம் தொகுதியில் 1952 முதல் 2016 வரை 15 முறை நடந்த சட்டப்பேரவைத் தேர்தல்களில் காங் கிரஸ் 3 முறை, சுயேச்சை ஒருமுறை, திமுக 4 முறை, அதிமுக 6 முறை, மனிதநேய மக்கள் கட்சி ஒருமுறை வென்றுள்ளது.

இத்தொகுதியில் நான்கு தேர்தல் களுக்குப் பிறகு (20 ஆண்டுகள்) திமுக நேரடியாக போட்டியிடுகிறது.

இத்தொகுதியில் 1967-ல் திமுக சார்பில் டி.தங்கப்பன், அதனையடுத்து 1971-ல் எம்எஸ்கே.சத்தியேந்திரன், 1989-ல் எம்எஸ்கே. ராஜேந்திரன், 1996-ல் ரகுமான்கான் ஆகியோர் வெற்றி பெற்றுள்ளனர். அதன்பின் 2001-ல் போட்டியிட்ட திமுக வேட்பாளர் ரகுமான்கான் தோல்வியடைந்தார். அதன்பிறகு 2006, 2011, 2016-ல் நடந்த தேர்தல்களில் ராமநாதபுரம் தொகுதி திமுக கூட்டணிக் கட்சிகளான காங்கிரஸ், மனிதநேய மக்கள் கட்சிக்கு ஒதுக்கப்பட்டன. இதனால் கடந்த 20 ஆண்டுகளாக திமுக நேரடியாக களம் இறங்காத சூழ்நிலை ஏற்பட்டது.

இந்நிலையில் தற்போது 2021 தேர்தலில் திமுக மாவட்ட பொறுப் பாளரான காதர்பாட்சா முத்துராலிங்கம் போட்டியிட வாய்ப்பளிக்கப்பட்டுள்ளது. இதன்மூலம் ராமநாதபுரம் தொகுதியில் 4 தேர்தல்களுக்குப் பிறகு திமுக ராமநாதபுரம் தொகுதியில் போட்டியிடும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் திமுக நிர்வாகிகளும், தொண்டர்களும் மிகுந்த உற்சாகம் அடைந்துள்ளனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in