விடிய விடிய கொட்டியது மழை; வெள்ளக்காடானது சென்னை

விடிய விடிய கொட்டியது மழை; வெள்ளக்காடானது சென்னை
Updated on
2 min read

வீடுகளில் வெள்ளம, சாலைகளில் தேங்கிய மழைநீர, மாநகர், புறநகர் பகுதிகளில் மக்கள் அவதி

*

விடிய விடிய கொட்டித் தீர்த்த கன மழையால் சென்னை மற்றும் புறநகர் பகுதிகள் வெள்ளக் காடாக மாறியுள்ளன. இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. பல பகுதிகளில் வீடுகளில் மழைநீர் புகுந்துள்ளது. சாலைகள், தெருக்களில் மழைநீர் தேங்கியுள்ளதால் வாகன ஓட்டிகள், நடந்து செல்பவர்கள் பெரிதும் அவதிக்குள்ளாகினர்.

வங்கக்கடலில் உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வுநிலை காரணமாக சென்னையில் நேற்று முன்தினம் லேசாக மழை பெய்தது. இரவில் மழை வலுக்கத் தொடங்கியது. இரவு 11 மணிக்கு பிறகு சென்னையின் அனைத்து பகுதிகளிலும் மழை தீவிரமானது. விடாமல் விடிய விடிய கொட்டித் தீர்த்த மழை நேற்று காலை 7 மணி வரை நீடித்தது.

நேற்று காலை 8 மணி வரை செங்குன்றம், புழல் போன்ற புறநகர் பகுதிகளில் 21 செ.மீ., மாதவரம், ஆவடியில் 16 செ.மீ., நுங்கம்பாக்கத்தில் 15 செ.மீ., மெரினாவில் 14 செ.மீ., கிண்டி, விமான நிலையத்தில் 13 செ.மீ. மழை பதிவானது.

வீடுகளில் புகுந்த வெள்ளம்

அம்பத்தூர் மண்டலத்தில் கொரட்டூர், மாதவரம் மண்டலத்தில் கணேசபுரம், புத்தகரம், தண்டையார்பேட்டை மண்ட லத்தில் கொருக்குப்பேட்டை, சோழிங்க நல்லூர் மண்டலத்தில் செம்மஞ்சேரி, தேனாம்பேட்டை மண்டலத்தில் ராயப் பேட்டை அவ்வை சண்முகம் சாலை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் பெரும் பாலான வீடுகளில் மழைநீர் புகுந்துள்ளது. பலத்த மழையால் சூளைமேடு, கில்நகர், மேத்தா நகர் போன்ற பகுதிகளில் சாலைகள் பழுதடைந்து, போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.

திருவான்மியூர் பஸ் நிலையத்தில் மழைநீர் புகுந்ததால், மக்கள் உள்ளே செல்ல முடியவில்லை. நுழைவுவாயிலி லேயே காத்திருந்து பஸ்ஸில் ஏறு கின்றனர். அப்பகுதியில் சாலையிலும் மழைநீர் தேங்கியதால், போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. சாலை நடுவே உள்ள தடுப்புகளை உடைத்து மழைநீர் வழிந்தோட வழிசெய்யப்பட்டது.

வாகன ஓட்டிகள் அவதி

தி.நகரில் ஜி.என்.செட்டி சாலை உட்பட பல சாலைகளில் இடுப்பு அளவுக்கு மழைநீர் ஓடியதால், வாகனங்கள் செல்ல முடியவில்லை. மழையால் அப்பகுதி களில் கடைகள் மூடப்பட்டிருந்தன. ராயப் பேட்டை அமீர் மகால் அருகே பாரதி சாலையில் மக்கள் நடந்து செல்ல முடியாத அளவுக்கு மழைநீர் வெள்ளம்போல தேங்கியுள்ளது. வாகனங்கள் நீந்திச் சென்றன. ராயப்பேட்டை அவ்வை சண்முகம் சாலையில் மழைநீர் தேங்கி நிற்பதால் வாகன ஓட்டிகள் அவதிக் குள்ளாயினர்.

தரமணி பறக்கும் ரயில் நிலையம் அருகே மழைநீர் குளம்போல தேங்கியது. ரயில் நிலையத்துக்கு வந்து செல்வோர் அவதிப்பட்டனர். தரமணி மத்திய தோல் ஆராய்ச்சி நிலைய வளாகம் மழைநீரால் சூழப்பட்டு குளம்போல மாறியுள்ளது. கோடம்பாக்கம், நுங்கம்பாக்கம் பகுதி களில் தாழ்வான குடியிருப்பு பகுதிகளில் தண்ணீர் தேங்கி நின்றது.

புறநகர் பகுதியிலும் பாதிப்பு

தாம்பரம், பெருங்களத்தூர், வண்ட லூர், ஊரப்பாக்கம், கூடுவாஞ்சேரி, பொத் தேரி, காட்டாங்கொளத்தூர், மறைமலை நகர் உள்ளிட்ட பகுதிகளில் பல இடங்களில் வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்தது. புதிய குடியிருப்பு பகுதிகளில் மழைநீர் சூழ்ந்து அப்பகுதிகள் தீவுபோல மாறியுள்ளன. புதிய குடியிருப்புகளுக்கான கட்டுமானப் பணிகள் தொடர் மழையால் முடங்கியுள்ளன.

தாம்பரம் நகராட்சியில் முடிச்சூர் ரோடு முதல் கிருஷ்ணா நகர் வரையிலும் ரங்கநாத புரம், இரும்புலியூர் உள்ளிட்ட இடங்களி லும் முழங்கால் அளவுக்கு தெருக்களில் மழைநீர் ஓடியது.

தேங்கிய நீரை அகற்றும் பணியில் நகராட்சி ஊழியர்கள் ஈடுபட்டனர். தாம்பரம் ரயில் நிலையம் அருகே உள்ள சுரங்கப் பாதையில் பம்ப்செட் வைத்து மழைநீர் உடனுக்குடன் வெளியேற்றப்பட்ட தால், வாகனங்கள் இடையூறின்றி சென் றன. எப்போதும் பரபரப்பாக காணப்படும் தாம்பரம் மார்க்கெட் மற்றும் சண்முகம் சாலையில் உள்ள கடைகள் வெறிச்சோடி காணப்பட்டன. பழக்கடைகள் மூடிக் கிடந்தன.

பள்ளி, கல்லூரிகளுக்கு நேற்று விடு முறை விடப்பட்டதால் புறநகர் பகுதிகளில் பேருந்துகள், மின்சார ரயில்களில் கூட்டம் குறைவாகவே இருந்தது.

வீட்டில் முடங்கிய மக்கள்

கிழக்கு தாம்பரம் சேலையூர், கேம்ப் ரோடு, சிட்லபாக்கம், அஸ்தினாபுரம், சந்தோஷபுரம், மேடவாக்கம், பள்ளிக் கரணை, வேளச்சேரி உள்ளிட்ட பல இடங்களிலும் தாழ்வான பகுதிகள், தெருக்களில் மழைநீர் தேங்கியுள்ளது. இதனால் பொதுமக்கள் வீடுகளில் முடங்கியுள்ளனர்.

சிட்லபாக்கத்தில் இருந்து சான டோரியம் செல்லும் சாலையில் உள்ள குப்பைக் கிடங்கின் சுவர் உடைந்து சாலையில் விழுந்ததால் அப்பகுதி முழுவதும் துர்நாற்றம் வீசுகிறது. மழையால் வேளச்சேரி பிரதான சாலை பலத்த சேதமடைந்துள்ளது. இதனால் அங்கு கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in