பெண் சிசு கொலைகளை தடுக்க கடுமையான சட்டம்: திமுக தேர்தல் அறிக்கை

பெண் சிசு கொலைகளை தடுக்க கடுமையான சட்டம்: திமுக தேர்தல் அறிக்கை
Updated on
1 min read

பெண் சிசு படுகொலைகளைத் தடுக்க கடுமையான சட்டங்கள் நிறைவேற்றப்பட்டு பெண் சிசுக் கொலை முற்றிலும் தடுக்கப்படும் என்று திமுக தேர்தல் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் ஏப்.6 அன்று நடைபெற உள்ளது. இதற்காக, அதிமுக, திமுக ஆகிய இரு முதன்மைக் கட்சிகளும் முழு வீச்சில் பணியாற்றி வருகின்றன. திமுக போட்டியிடும் 173 தொகுதிகளின் வேட்பாளர் பட்டியலை அக்கட்சியின் தலைவர் ஸ்டாலின் நேற்று அறிவாலயத்தில் வெளியிட்டார். இந்நிலையில், திமுக தேர்தல் அறிக்கை இன்று வெளியாகியுள்ளது.

அதில் ,

* தமிழகத்தில் சிறார்கள், சிறுமிகள் மற்றும் கைக்குழந்தைகளைக் கடத்திச் செல்வது அதிகரித்து வருகிறது. ஏற்கெனவே நடைமுறையில் உள்ள சட்டங்களை மீறி இந்தக் கடத்தல்கள் நடைபெறுகின்றன. இந்தச் சமூக அவலத்துக்கு முடிவு கட்டவும், இந்தச் செயலில் ஈடுபடுவோருக்குக் கடுமையான தண்டனை வழங்குவதற்கும், குழந்தைகள் கடத்தல் (தண்டனை) சட்டம் ஒன்று நிறைவேற்றப்படும்.

* பிறக்கும் போதே ஊட்டச்சத்துக் குறைவினால் பாதிக்கப்படும் குழந்தைகளுக்குச் சத்தான உணவு வழங்கிட குழந்தைகள் நலப் பாதுகாப்புத் திட்டம் செயல்படுத்தப்படும். இதன் மூலம் ஊட்டச்சத்து நிறைந்த உணவு வகைகள் கொண்ட உணவுக் கூடைத் திட்டம் செயல்படுத்தப்படும்.

* பெண் சிசு படுகொலைகளைத் தடுக்க கடுமையான சட்டங்கள் நிறைவேற்றப்பட்டு பெண் சிசுக் கொலை முற்றிலும் தடுக்கப்படும்.

*குழந்தைத் தொழிலாளர் தடைச் சட்டம் கட்டாயமாக - கண்டிப்புடன் அமல்படுத்தப்பட்டு குழந்தைகள் கல்வி முன்னேற்றத்தில் அதிக கவனம் செலுத்தப்படும்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in