கைம்பெண் மகளிர் நல வாரியம் அமைக்கப்படும்: திமுக தேர்தல் வாக்குறுதி

கைம்பெண் மகளிர் நல வாரியம் அமைக்கப்படும்: திமுக தேர்தல் வாக்குறுதி
Updated on
1 min read

கைம்பெண்கள் முன்னேற்றத்திற்காகக் கைம்பெண் மகளிர் நல வாரியம் அமைக்கப்படும் என்று திமுக தேர்தல் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் ஏப்.6 அன்று நடைபெற உள்ளது. இதற்காக, அதிமுக, திமுக ஆகிய இரு முதன்மைக் கட்சிகளும் முழு வீச்சில் பணியாற்றி வருகின்றன. திமுக போட்டியிடும் 173 தொகுதிகளின் வேட்பாளர் பட்டியலை அக்கட்சியின் தலைவர் ஸ்டாலின் நேற்று அறிவாலயத்தில் வெளியிட்டார். இந்நிலையில், திமுக தேர்தல் அறிக்கை இன்று வெளியாகியுள்ளது.

அதில்,

* தமிழகத்தில் கைம்பெண்களின் நிலை பரிதாபத்திற்குரியதாக உள்ளது. கைம்பெண்களின் பிரச்சினைகள் குறித்துப் பலமுறை கோரிக்கைகள் அளிக்கப்பட்டும் அ.தி.மு.க அரசு செவிசாய்க்கவில்லை.

* கைம்பெண்களுக்குப் பொருளாதாரப் பாதுகாப்பு அளித்தல் மற்றும் அவர்களுடைய குழந்தைகளின் எதிர்காலத்துக்கு உரிய உத்திரவாதம் அளித்தல் ஆகியவற்றை உறுதி செய்யும் வகையில் 35 வயதுக்கு மேற்பட்ட கணவனால் கைவிடப்பட்ட மற்றும் கைம் பெண்களுக்கு அவர்களின் கல்வித் தகுதியின் அடிப்படையில் அரசு மற்றும் அரசு நிறுவனங்களில் வேலை வாய்ப்பு
வழங்கப்படும்.

* கைம்பெண்கள் முன்னேற்றத்திற்காகக் கைம்பெண் மகளிர் நல வாரியம் அமைக்கப்படும்.

இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in