கட்சியைக் காட்டிக் கொடுத்தவர்களுக்கு சீட்: காங்கிரஸ் எம்.பி. விஷ்ணுபிரசாத் போராட்டம்

கட்சியைக் காட்டிக் கொடுத்தவர்களுக்கு சீட்: காங்கிரஸ் எம்.பி. விஷ்ணுபிரசாத் போராட்டம்
Updated on
1 min read

கட்சியைக் காட்டிக் கொடுத்தவர்களுக்கு சட்டப்பேரவைத் தேர்தலில் காங்கிரஸ் சீட் வழங்குவதாக அக்கட்சியின் எம்.பி. விஷ்ணு பிரசாத் குற்றம் சாட்டியுள்ளார்.

காங்கிரஸ் கட்சியின் ஆரணி நாடாளுமன்ற உறுப்பினர் விஷ்ணு பிரசாத் சென்னை சத்தியமூர்த்தி பவனில் தனது ஆதரவாளர்களுடன் உண்ணாவிரதத்தில் ஈடுபட்டுள்ளார்.

இதுகுறித்து விஷ்ணு பிரசாத் கூறும்போது, ''காங்கிரஸ் கட்சியின் முக்கிய நிர்வாகிகள் தங்களது உறவினர்களுக்குத் தொகுதியைக் கேட்டுப் பெறுகிறார்கள். தமாகாவிலிருந்து விலகி மீண்டும் காங்கிரஸில் இணைந்தவர்களுக்கு தொகுதி வழங்கப்படுகிறது. இந்த காங்கிரஸ் பேரியக்கம் ராகுல் காந்தியின் ரத்த வியர்வையால் வளர்ந்த கட்சி. கட்சியைக் காட்டிக் கொடுத்தவர்களுக்கு சீட் வழங்குவதில் என்ன நியாயம்? உண்மையாக உழைப்பவர்களுக்குத் தொகுதிகளை வழங்க வேண்டும்'' என்று தெரிவித்துள்ளார்.

திமுக கூட்டணியில் காங்கிரஸுக்கு 25 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன. வேட்பாளர்கள் பட்டியல் காங்கிரஸ் தரப்பில் அதிகாரபூர்வமாக இன்னும் வெளியிடப்படவில்லை.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in