முதல் தலைமுறை பட்டதாரிகளுக்கு வேலை வாய்ப்பில் முன்னுரிமை; சத்துணவு அங்கன்வாடி ஊழியர்கள் அரசு ஊழியர்: திமுக தேர்தல் அறிக்கை

முதல் தலைமுறை பட்டதாரிகளுக்கு வேலை வாய்ப்பில் முன்னுரிமை; சத்துணவு அங்கன்வாடி ஊழியர்கள் அரசு ஊழியர்: திமுக தேர்தல் அறிக்கை
Updated on
1 min read

திமுக தேர்தல் அறிக்கையில் ஏழை, எளிய மக்கள் பெரிதும் எதிர்பார்க்கும் வேலைவாய்ப்புகள் குறித்து அதிக அறிவிப்புகள் வெளியாகியுள்ளன. அதில் சத்துணவு ஊழியர்களின் நீண்டகால கோரிக்கையான அரசு ஊழியராக்குவது என்கிற கோரிக்கையை நிறைவேற்றுவோம் என திமுக அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

இன்று திமுக தேர்தல் அறிக்கையை திமுக தலைவர் ஸ்டாலின் வெளியிட்டார். மொத்தம் 500 அறிவிப்புகள் இருந்தாலும் சில முக்கிய அறிவிப்புகள் என ஸ்டாலின் சிலவற்றை அறிவித்தார். அதில், பொதுமக்கள் அதிகம் எதிர்பார்க்கும் நாட்டின் மிக முக்கியமான பிரச்சினையான இளைஞர்களின் எதிர்பார்ப்பான வேலை வாய்ப்பு, அரசு வேலை குறித்த அறிவிப்பு உள்ளிட்டவை குறித்து அறிவிப்புகள் வெளியாகியுள்ளன.

சத்துணவு மற்றும் அங்கன்வாடி பணியாளர்களை அரசு ஊழியர்களாக்கும் கோரிக்கையும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது. இதன் மூலம் கிராமப் புறம் முதல் நகரம் வரை உள்ள ஆயிரக்கணக்கான பெண்கள் மிகுந்த பயனுறுவர்.

அடுத்த முக்கிய அம்சம், அரசு மற்றும் கல்வித்துறையில் காலியாக உள்ள 3.5 லட்சம் பணியிடங்கள் நிரப்பப்படும் என்கிற அறிவிப்பு. மேலும், 2 லட்சம் வேலை வாய்ப்புகள் புதிதாக வழங்கப்படும் என்கிற அறிவிப்பும் வரவேற்புக்குரிய ஒன்று.

அதேபோன்று தொழில் நிறுவனங்களில் 75% தமிழர்களுக்கே வேலைவாய்ப்பு எனச் சட்டம் கொண்டுவரப்படும் என்பது காலத்துக்கேற்ற ஒன்றாக இளைஞர்களால் வரவேற்பைப் பெற்றுள்ளது.

வேலையில்லா பட்டதாரிகள் குறுந்தொழில் தொடங்க ரூ.20 கடன் வழங்கப்படும். முதல் தலைமுறைப் பட்டதாரிகளுக்கு அரசு வேலை வாய்ப்பில் முன்னுரிமை, வேலை வாய்ப்பில் பெண்களுக்கு 40% இட ஒதுக்கீடு என்கிற அறிவிப்பும் கவனிக்கத்தக்க அம்சங்கள்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in