மீண்டும் அதிமுக ஆட்சி அமையும் சூழல்; அதற்கு பாஜகதான் காரணம்: அமைச்சர் கடம்பூர் ராஜூ பேச்சு

மீண்டும் அதிமுக ஆட்சி அமையும் சூழல்; அதற்கு பாஜகதான் காரணம்: அமைச்சர் கடம்பூர் ராஜூ பேச்சு
Updated on
1 min read

வேல் யாத்திரை மூலம் தமிழகத்தில் பாஜக வளர்ச்சி அடைந்துள்ளது என்று அமைச்சர் கடம்பூர் ராஜூ தெரிவித்துள்ளார்.

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் நடந்த கூட்டத்தில் அமைச்சர் கடம்பூர் ராஜூ பேசும்போது, “பிரச்சார உத்தியை பாஜகவுக்கு நாங்கள் சொல்லித் தரத் தேவையில்லை. வேல் யாத்திரையின் மூலம் மக்களிடம் கவனம் பெற்ற பாஜக, தமிழகத்தில் வளர்ச்சி அடைந்துள்ளது.

தமிழகத்தில் மீண்டும் அதிமுக ஆட்சி அமையும் நிலை உருவாகும். அதற்கு பாஜகதான் காரணம். இரண்டு தண்டவாளங்களைப் போன்றது அதிமுகவும், பாஜகவும். இந்தத் தேர்தல் தர்ம யுத்தம். நிச்சயம் தீய சக்திகளுக்கு இடமில்லை” என்று தெரிவித்துள்ளார்.

இத்தேர்தலில் கோவில்பட்டி தொகுதியில் அதிமுக சார்பாக அமைச்சர் கடம்பூர் ராஜூ போட்டியிடுகிறார்.

தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் ஏப்.6 அன்று நடைபெற உள்ளது. இதற்காக, அதிமுக, திமுக,, மக்கள் நீதி மய்யம், நாம் தமிழர் கட்சி, அமமுக ஆகிய கட்சிகள் முழு வீச்சில் பணியாற்றி வருகின்றன.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in