சென்னையில் அதிகரித்து வரும் கரோனா தொற்று; விழிப்புணர்வு பணி மீண்டும் தொடக்கம்: மாநகராட்சி அதிகாரிகளுக்கு ஆணையர் அறிவுறுத்தல்

சென்னையில் அதிகரித்து வரும் கரோனா தொற்று; விழிப்புணர்வு பணி மீண்டும் தொடக்கம்: மாநகராட்சி அதிகாரிகளுக்கு ஆணையர் அறிவுறுத்தல்
Updated on
1 min read

சென்னையில் கரோனா தொற்றுஅதிகரித்து வரும் நிலையில், பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் பணிகளை மாநகராட்சி மீண்டும் தொடங்கியுள்ளது.

சென்னையில் கடந்த ஆண்டு, தினமும் கரோனா தொற்றால் பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை 2 ஆயிரத்துக்குமேல் இருந்தது. பல்வேறு நடவடிக்கைகள் காரணமாக, தொற்றுபாதிப்பு குறைந்து வந்தது. தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவோர் எண்ணிக்கையும் வெகுவாக குறைந்து வந்தது. கடந்த பிப்.10-ம் தேதி நிலவரப்படி சென்னையில் சிகிச்சை பெற்று வருவோர் எண்ணிக்கை 1,550 ஆக குறைந்திருந்தது.

தற்போது ஊரடங்கு தளர்வால்பல இடங்களில் வழக்கம்போல மக்கள் கூட்டம் காணப்படுகிறது. அத்துடன் சட்டப்பேரவை தேர்தல்காரணமாக அரசியல் கட்சிகள்நடத்தும் கூட்டங்கள், விழாக்களிலும் கூட்டம் அலைமோதுகிறது. பெரும்பாலோர் முகக் கவசம் அணிவது, சமூக இடைவெளியை கடைபிடிப்பது போன்ற வழிகாட்டு முறைகளை பின்பற்றாததால் சென்னையில் மீண்டும் தொற்று அதிகரித்து வருவதாக கூறப்படுகிறது.

சென்னையில் தற்போது கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுசிகிச்சை பெற்று வருவோர் எண்ணிக்கை மார்ச் 12-ம் தேதி நிலவரப்படி 1,940 ஆக உயர்ந்துள்ளது. அதிகபட்சமாக சென்னையில் நேற்று 265பேருக்கு வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக ஒருதெருவில் 3 பேருக்கு மேல் கரோனாதொற்றால் பாதிக்கப்பட்டிருந்தால், அந்த தெருவில் போக்குவரத்தைகட்டுப்படுத்த சில வீடுகள் அளவுக்கோ அல்லது தெரு அளவுக்கோ தடுப்புகளை ஏற்படுத்துமாறு, மண்டல சுகாதார அதிகாரிகளுக்கு மாநகராட்சி நிர்வாகம் உத்தரவிட்டு இருந்தது.

அதன்படி, 10-க்கும் மேற்பட்ட இடங்களில் தடுப்புகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. அதைத் தொடர்ந்து விழிப்புணர்வு பணிகளையும் மேற்கொள்ளுமாறு அதிகாரிகளுக்கு மாநகராட்சி ஆணையர் கோ.பிரகாஷ் அறிவுறுத்தியுள்ளார். தற்போது சென்னையில் பல்வேறு பகுதிகளில் முகக் கவசம் அணிவது தொடர்பாக பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது. கரோனா பாதுகாப்பு நடவடிக்கைகள் தொடர்பாக மேளம் அடித்து, துண்டு பிரசுரங்கள்விநியோகிப்பட்டன. பொதுமக்களுக்கு கபசுர குடிநீரும் வழங்கப்பட்டது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in