

ஊழியர்கள் வேலைநிறுத்தம் காரணமாக பொதுத் துறை வங்கிகளில் 4 நாட்களுக்கு பணப் பரிவர்த்தனை உள்ளிட்ட சேவைகள் பாதிக்கப்படும் நிலை ஏற்பட்டுள்ளது.
இரண்டு பொதுத்துறை வங்கிகள் தனியார் மயம் ஆக்கப்படுவதாக மத்திய பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து ஏற்கெனவே திட்டமிட்டபடி மார்ச்15, 16-ம் தேதி களில் நாடு தழுவிய வேலைநிறுத்தத்தில் ஈடுபடப் போவதாக வங்கி ஊழியர்கள் சங்கம் அறிவித்துள்ளது.
இன்று 2-வது சனிக்கிழமை, நாளை ஞாயிறு என்பதால் வங்கிகளுக்கு விடுமுறை. அடுத்த 2 நாட்களுக்கு வேலைநிறுத்தம் நடக்க உள்ள தால், இன்று முதல் 16-ம் தேதி வரை 4 நாட்கள் பொதுத் துறை வங்கிகள் செயல்படாது. இத னால், பணம், காசோலை பரிவர்த்தனைகள் உள்ளிட்ட அனைத்து விதமான வங்கிச் சேவை களும் பாதிக்கப்படும் நிலை ஏற்பட்டுள்ளது.