தமிழகம், புதுச்சேரி முழுவதும் காங். - திமுக கூட்டணிக்கு வெற்றி வாய்ப்பு பிரகாசம்: முன்னாள் முதல்வர் நாராயணசாமி கணிப்பு

தமிழகம், புதுச்சேரி முழுவதும் காங். - திமுக கூட்டணிக்கு வெற்றி வாய்ப்பு பிரகாசம்: முன்னாள் முதல்வர் நாராயணசாமி கணிப்பு
Updated on
1 min read

தமிழகம், புதுவையில் காங்கிரஸ் - திமுக கூட்டணி ஆதரவு அலை வீசுவதால் வெற்றி வாய்ப்பு பிரகாசமாக உள்ளது என்று முன்னாள் முதல்வர் நாராயணசாமி தெரி வித்துள்ளார்.

புதுச்சேரி காங்கிரஸ் கட்சி அலு வலகத்தில் முன்னாள் முதல்வர் நாராயணசாமி கூறியதாவது:

புதுச்சேரியில் பலர் பல கட்சிகளில் இருந்து விலகி காங்கிரஸில் இணைய வந்து கொண்டிருக்கிறார்கள். அதற்கு முக்கியகாரணம், புதுவையில் டெபாசிட்டை இழந்த பாஜக கட்சி, நியமன எம்எல்ஏக்களை வைத்து மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசை கவிழ்த்தது தான். மிகப்பெரிய ஜனநாயக படுகொலையை பாஜக செய்துள்ளது.

பதவி சுகத்தை அனுபவித்து விட்டு, முதுகில் குத்திவிட்டு துரோகிகள் காங்கிரஸை விட்டு விலகி,பாஜகவில் சேர்ந்து ஆட்சியை கவிழ்த்திருக்கிறார்கள். அவர்கள் நிற்பதற்கு எந்தத் தொகுதியும் இல்லாத நிலையில், பல தொகுதிகளை தேடி கொண்டிருக் கிறார்கள். ‘முதல்வர் நாற்காலி வேண்டும்’ என்று சென்றவர்கள் நடுத்தெருவில் நிற்கிறார்கள். இதுதான் பாஜகவின் சரித்திரம். புதுவை மக்கள் இதை நன்றாக உணர்ந்து கொண்டிருக்கிறார்கள்.

தமிழகத்திலும், புதுவையிலும் திமுக – காங்கிரஸ் ஆதரவு அலை வீசுகிறது. புதுவை மக்கள் மதவாத சக்திகளை புறக்கணிப்பார்கள் என்பதில் எங்களுக்கு எவ்வித ஐயப்பாடும் இல்லை.

‘தனித்துப் போட்டியா?

தலைமை முடிவு செய்யும்’

‘திமுகவுடன் கூட்டணி வேண்டாம்; காங்கிரஸ் தனித்துப் போட்டியிட வேண்டும் என்று புதுவை காங்கிரஸ் கட்சியின் நிர்வாகிகள் தீர்மானம் நிறைவேற்றியுள்ளார்களே!’ என்று நாராயணசாமியிடம் கேட்டதற்கு, "கட்சித் தலைமையின் கவனத்துக்கு இதை கொண்டு செல்வோம். இதில் தலைமை தகுந்த முடிவெடுக்கும். 30 தொகுதிகளில் போட்டியிட கட்சி நிர்வாகிகளிடம் விருப்ப மனுக்களைப் பெற்றிருக்கிறோம். அதன் மீது பரிசீலனை செய்து நேர்காணலும் நடந்துள்ளது. வேட்பாளர்கள் , தொகுதி தொடர்பாக காங்கிரஸ் தேர்தல் குழு முடிவு செய்யும்" என்று தெரிவித்தார். எந்த நாட்டியிலும் நியமனம் செய்யப்பட்ட உறுப்பினர்களால் எந்த ஆட்சியும் கலைக்கப்பட்ட சரித்திரம் கிடையாது.

பிரதமர் மோடியும், உள்துறை அமைச்சர் அமித்ஷாவும் இணைந்து அரசை குலைத்து மக்களுக்கு துன்பத்தை விளை வித்தனர்.

அதன் விளைவுகளை வருகிற தேர்தலில் சந்திப்பார்கள். காங்கிரஸ் – திமுக கூட்டணியின் வெற்றி வாய்ப்பு பிரகாசமாக உள்ளது என்று குறிப்பிட்டார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in