Published : 13 Mar 2021 03:13 AM
Last Updated : 13 Mar 2021 03:13 AM

பாஜகவுடன் தொகுதிப் பங்கீட்டில் தொடர்ந்து இழுபறி; தனித்துப் போட்டியிட தலைமையிடம் அனுமதி கோரும் புதுவை அதிமுக: சமாதானப்படுத்த டெல்லி தலைமை அறிவுறுத்தல்

புதுச்சேரி

தேசிய ஜனநாயக கூட்டணியில் தொகுதிப் பங்கீட்டில் சிக்கல் நிலவுவதால் தனித்து போட்டியிட அனுமதி தருமாறு அதிமுக நிர்வாகிகள் கோரியுள்ளனர். பாஜகவினர் மேலிட தலைவர்களுடன் ஆலோ சித்து கூடுதல் இடங்களை ஒதுக் கித் தர திட்டமிட்டுள்ளனர்.

தேசிய ஜனநாயக கூட்டணி யில் வரும் தேர்தலில் என்ஆர் காங்கிரஸ், அதிமுக, பாஜக, பாமகஆகிய கட்சிகள் இடம்பெற்றிருந் தன. என்ஆர் காங்கிரஸூக்கு 16 இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன. மீதமுள்ள 14 தொகுதிகளில் பாஜக,அதிமுக, பாமக ஆகிய கட்சிகள்பங்கீடு செய்துகொள்ள வேண்டும்.இதில் அதிகமான தொகுதிகளில் போட்டியிட பாஜக விரும்புகிறது. இதனால் பாமகவுக்கு தொகுதி யில்லை என கூறிவிட்டனர். இதையடுத்து பாமக அமைப்பாளர் தன்ராஜ், தொகுதி வழங்காவிட்டால் தனித்து போட்டியிடுவோம் எனஅறிவித்தார். அவரை சமாதான படுத்தும் நடவடிக்கையில் முன் னாள் அமைச்சர் நமச்சிவாயம் இறங்கியுள்ளார்.

இச்சூழலில் கூட்டணியில் இடம்பெற்றுள்ள அதிமுகவுக்கு 4 தொகுதிதான் ஒதுக்கப்படும் என தகவல் வெளியானது. இது அதிமுகவுக்கு கடும் கோபத்தை ஏற்படுத் தியுள்ளது.

கடந்த 2016 சட்டமன்ற தேர்தலில் அதிமுக தனித்து போட்டியிட்டு 4 தொகுதியில் வெற்றி பெற்றுள்ளது. கூட்டணியில் குறைந்தபட்சம் 7 தொகுதியை பெற வேண்டும் என அதிமுக முயல்கிறது. ஆனால்,பாஜக ஒரு இடத்தில் கூட வெற்றிபெறவில்லை. தற்போது கூட்டணியில் அதற்கு 10 இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன. இது அதிமுகவினரி டையே அதிருப்தியை ஏற்படுத்தி யிருக்கிறது.

இந்நிலையில் தமிழக அமைச்சர் எம்.சி.சம்பத், பாஜக தலைவர் களை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார். அதைத்தொடர்ந்து புதுவை அதிமுக முக்கிய நிர்வாகி கள் கட்சித் தலைமையை சந்திக்க சென்னை சென்றனர்.

இதுபற்றி அதிமுக கட்சி உயர் வட்டாரங்களில் விசாரித்தபோது, “சென்னையில் முதல்வர் பழனி சாமியை புதுச்சேரி நிர்வாகிகள் சந்தித்து பேசினர். அப்போது அவர் துணை முதல்வரை சந்திக்கும்படி அறிவுறுத்தினார். இதன்பின் துணை முதல்வரை சந்தித்தனர். அப்போது புதுவையில் கடந்த தேர்தலைப்போல தனித்து போட் டியிட அனுமதிக்க வேண்டும். குறைந்த தொகுதிகளை பெறக் கூடாது என அதிமுகவினர் வலியு றுத்தினர்.

துணை முதல்வர் சொந்த தொகுதியான தேனிக்கு புறப் பட்டதால் பாஜக மேலிடத்திடம் பேசி முடிவெடுப்பதாக கூறினார். இதனால் பாஜக கூட்டணியில் தொகுதி பங்கீட்டில் குழப்பமும், இழுபறியும் நீடிக்கிறது” என்று குறிப்பிட்டனர்.

இந்நிலையில் வேட்புமனு தாக் கல் தொடங்கியுள்ளது. தொகுதி பங்கீட்டை இறுதி செய்யாமல் இருப்பது இக்கட்டான சூழலுக்கு தள்ளிவிடும் என பாஜகவினர் கருதுகின்றனர்.

அகில இந்திய தலைமையை தொடர்பு கொண்டு கூட்டணி நிலவரம் குறித்து புதுச்சேரி பாஜகவினர் பேசியுள்ளனர். கட்சி மேலிட ஆலோசனையின்படி அதிமுகவினரை சமாதானப்படுத்தி கூடுதல் தொகுதிகளை ஒதுக்கித் தரும் முடிவுக்கு பாஜக வந்துள்ளது. இன்றுக்குள் தொகுதி பங்கீடு நிறைவடைந்துவிடும். தமிழக பாஜக தலைவர்களுடன் இதுபற்றி பேசி முடிவு எடுக்கவுள்ளனர்.

கடந்த தேர்தலில் பாஜக ஒரு இடத்தில் கூட வெற்றி பெறவில்லை. தற்போது 10 இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x