கடலூர் தொகுதிக்கு கூடுதல் முக்கியத்துவம் அதிமுகவின் திட்டங்கள் அடிமட்ட மக்களைச் சென்றடைந்திருக்கிறது: முதல் நாளில் மனுத்தாக்கல் செய்த எம்.சி.சம்பத் பெருமிதம்

கடலூர் தொகுதியில் போட்டியிட தேர்தல் நடத்தும் அலுவலர் ஜெகதீஸ்வரனிடம் வேட்புமனுவை தாக்கல் செய்கிறார் அமைச்சர் எம்.சி.சம்பத்.
கடலூர் தொகுதியில் போட்டியிட தேர்தல் நடத்தும் அலுவலர் ஜெகதீஸ்வரனிடம் வேட்புமனுவை தாக்கல் செய்கிறார் அமைச்சர் எம்.சி.சம்பத்.
Updated on
1 min read

கடலூர் சட்டப்பேரவைத் தொகுதியில் அதிமுக சார்பில் மீண்டும்போட்டியிடும் தமிழக தொழில் துறை அமைச்சர் எம்.சி.சம்பத் முதல் நாளான நேற்று வேட்பு மனுத்தாக்கல் செய்தார்.

தமிழக சட்டப்பேரவைத் தேர்த லுக்கான வேட்பு மனுத் தாக்கல் நேற்று தொடங்கியது. வரும் 19-ம் தேதி வரை மனுத்தாக்கல் நடைபெறுகிறது.

முதல் நாளான நேற்று, அதிமுக சார்பில் கடலூர் சட்டப்பேரவைத் தொகுதியில் அதிமுக மத்திய மாவட்ட செயலாளரும் அமைச்சருமான எம்.சி.சம்பத், நேற்று கடலூர் சார் - ஆட்சியர் அலுவலகத்தில் தொகுதி தேர்தல் அலுவலர் ஜெகதீஸ்வரனிடம் தனது வேட்பு மனுவை தாக்கல் செய்தார்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய எம்.சி.சம்பத், “கடந்த 5 ஆண்டுகளில், அதிமுக அரசு அறிவித்து செயல்படுத்திய திட்டங்கள் அடிமட்ட மக்களைச் சென்றடைந்துள்ளது. முக்கியமாக பெண்களுக்கு முக்கியத்துவம் அளித்து பல நல்ல திட்டங்களை அறிவித்துள்ளார். இதனால் தமிழ கத்தில் உள்ள அனைத்து அதிமுக சட்டப்பேரவை வேட்பாளர்களும் வெற்றி பெறுவதற்கு வழிவகை செய்துள்ளார்.

இயற்கை பேரிடருக்கு உள்ளாகும் கடலூர் தொகுதியில் தமிழக முன்னாள் முதல்வர்ஜெயலலிதா நேரில் வந்து பார்வையிட்டு, உரிய நடவடிக்கை களை மேற்கொண்டார். அதே போல் முதல்வர் பழனிசாமி நேரில் வந்து பார்வையிட்டு, உரிய நிவாரணங்களை வழங்கினார். நீண்ட கால திட்டமான அருவா மூக்கு திட்டத்தையும் அறிவித்து உள்ளார். அடுத்து நாங்கள் ஆட்சிக்கு வந்து அந்தத் திட்டத்தை நிறைவேற்றுவோம்’‘ என்று தெரி வித்தார்.

எம்.சி.சம்பத், இதே கடலூர் தொகுதியில் கடந்த 2016-ம்ஆண்டு அதிமுக சார்பில் போட்டி யிட்டு வெற்றி பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in