விருதுநகர் மாவட்டத்தில் முதல் நாளில் வெறிச்சோடிய தேர்தல் அலுவலகங்கள் - 6 தொகுதிகளில் வேட்புமனு தாக்கல் இல்லை

வேட்பு மனுத் தாக்கல் செய்ய யாரும் வராததால் வெறிச்சோடிக் காணப்பட்ட விருதுநகர் வட்டாட்சியர் அலுவலகம்.
வேட்பு மனுத் தாக்கல் செய்ய யாரும் வராததால் வெறிச்சோடிக் காணப்பட்ட விருதுநகர் வட்டாட்சியர் அலுவலகம்.
Updated on
1 min read

வேட்புமனுத் தாக்கலுக்கு முதல் நாளான நேற்று திருச்சுழியில் ஒருவர் மனுத் தாக்கல் செய்தார். மற்ற ஆறு தொகுதிகளில் யாரும் வேட்பு மனுத் தாக்கல் செய்யா ததால் தேர்தல் அலுவலகங்கள் வெறிச் சோடிக் கிடந்தன.

சட்டப் பேரவைத் தேர்தல் வேட்புமனுத் தாக்கல் நேற்று தொடங்கியது. ராஜபாளையம் தொகுதிக்கான வேட்பு மனுக்கள் ராஜபாளையம் வட்டாட்சியர் அலுவலகத்திலும், வில்லிபுத்தூர் தொகுதிக்கான வேட்பு மனுக்கள் வில்லிபுத்தூர் வட்டாட்சியர் அலுவலகத்திலும், சாத்தூர் தொகுதிக்கான வேட்பு மனுக்கள் சாத்தூர் கோட்டாட்சியர் அலுவலகத்திலும் வழங்கலாம்.

சிவகாசி தொகுதிக்கான வேட்பு மனுக்கள் சிவகாசி சார்- ஆட்சியர் அலுவலகத்திலும், அருப்புக் கோட்டை தொகுதிக்கான வேட்பு மனுக்கள் அருப்புக்கோட்டை கோட்டாட்சியர் அலுவலகத்திலும், விருதுநகர் தொகுதிக்கான வேட்பு மனுக்கள் விருதுநகர் வட்டாட்சியர் அலுவலகத்திலும், திருச்சுழி தொகுதிக்கான வேட்பு மனுக்கள் திருச்சுழி வட்டாட்சியர் அலுவலகத்திலும் வழங்கலாம்.

வேட்பு மனுத் தாக்கல் நேற்று தொடங்கியது. இதில் பிரதான கட்சி வேட்பாளர்கள் யாரும் வேட்பு மனுக்களை தாக்கல் செய்ய வில்லை. திருச்சுழியில் அகிம்சா சோாஷியலிஸ்ட் கட்சியை சேர்ந்த கழுவனஞ்சேரி வெள்ளைச்சாமி மட்டும் வேட்பு மனுத் தாக்கல் செய்தார்.

இதனால் விருதுநகர், வில் லிபுத்தூர், ராஜபாளையம் வட்டாட் சியர் அலுவலகங்களும், சிவகாசி சார்-ஆட்சியர் அலுவலகமும், சாத்தூர், அருப்புக்கோட்டை ஆகிய கோட்டாட்சியர் அலுவலகங்களும் வெறிச்சோடி காணப்பட்டன.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in