

விருதுநகர் மாவட்டத்தில் 4 எம்.எல்.ஏ.க்களும் மீண்டும் இத்தேர் தலில் களம் இறக்கப்பட்டுள்ளனர்.
விருதுநகர் மாவட்டத்தில் மொத்தம் உள்ள 7 சட்டப் பேரவைத் தொகுதிகளில் தற் போது எம்.எல்.ஏ.க்களாக உள்ள திருச்சுழி தங்கம்தென்னரசு, அருப்புக்கோட்டை சாத்தூர் ராமச்சந்திரன், விருதுநகர் ஏ.ஆர்.ஆர்.சீனிவாசன், ராஜ பாளையம் தங்கப்பாண்டியன் ஆகியோர் திமுக சார்பில் மீண் டும் போட்டியிடுகின்றனர்.
இவர்களில், கட்சியினர் மத்தியில் மட்டுமின்றி பொதுமக்களிடமும் செல்வாக்குப் பெற்றவர் தங்கம்தென்னரசு. இவரது தந்தை தங்கப்பாண்டியன் அமைச்சராகப் பொறுப்பு வகித்தது முதல், பாரம்பரியமான இக்குடும்பத்தினர் மீது மக்களுக்கான மதிப்பும் இன்றளவும் குறையாமல் உள் ளது. கடந்தமுறை போன்று அதிமுக நேரடியாக களம் காணாமல் கூட்டணிக் கட்சிக்கு ஒதுக்கியுள்ளதும் திமுகவுக்கு கூடுதல் பலம்.
அருப்புக்கோட்டையில் மக்க ளின் நன்மதிப்பைப் பெற்றவர் சாத்தூர் ராமச்சந்திரன், கூட்டுக் குடிநீர் திட்டப் பணிகள் மற்றும் பல்வேறு பணி களை சட்டப்பேரவையில் கேட்டுப்பெற்றதோடு கடந்த 4 மாதங்களுக்கு முன்பே தேர்தல் பணியைத் தொடங்கியவர். திமுக சார்பில் கோலப் போட்டிகள் உள்ளிட்ட பல்வேறு போட்டிகளை நடத்தி பெண்களுக்குப் பரிசுகள் வழங்கி பிரச்சாரத்தைத் தொடங் கியது குறிப்பிடத்தக்கது.
கரோனாவால் பாதித்த எம்எல்ஏ
ராஜபாளையம் திமுக வேட்பாளர் தங்கப்பாண்டியன் இதுவரை தான் சட்டப்பேரவை உறுப்பினருக்கான ஊதியம் முழு வதையும் தொகுதி மக்களுக்கே வழங்கி வந்தது குறிப்பிடத்தக்கது. இதன் மூலம் தொகுதியில் உள்ள ஏழை எளியோர், மாற்றுத்திறனாளிகள், முதியோர் மற்றும் பொதுநலவாதிகளிடம் நன்மதிப்பைப் பெற்றுள்ளார். அதோடு, கரோனா காலத்தில் கிராமங்கள் தோறும் சென்று மக்களைச் சந்தித்து நலத்திட்ட உதவிகள் வழங்கினார். தான் கரோனாவால் பாதிக்கப்பட்ட போதிலும் சிகிச்சைபெற்று திரும்பி வந்து மீண்டும் மக்களுக்கான நலத்திட்டங்களை வழங்கினார்.
இதுபோன்ற செயல்களால் தனக்கான வாக்கு வங்கியைச் சிதறாமல் வைத்துள்ளார் தங்கப்பாண்டியன்.
விருதுநகர் திமுக வேட்பாளர் ஏ.ஆர்.ஆர்.சீனிவாசன் குறிப்பிட்ட வகையிலான மக்கள் நலத்திட்டப் பணிகளை மேற்கொள்ளவில்லை என்ற அதிருப்தி வாக்காளர்கள் மத்தியில் நிலவுகிறது. கடந்த 5 ஆண்டுகளில் சட்டப்பேரவை அலுவலகத்தை திறந்துவைத்து மக்களைச் சந்திக்காதது, குறிப்பிட்ட வகையில் முக்கிய நலத்திட்டப் பணிகளை தொகுதியில் கொண்டுசேர்க்காதது போன்ற அதிருப்தி உள்ளது.
ஆனாலும், எவ்விதப் பிரச்சினைகளிலும் சிக்காதவர் என்பதோடு சமுதாய வாக்கு வங்கி உள்ளதாலும் இம்முறை ஏ.ஆர்.ஆர்.சீனிவாசனுக்கும் கட்சித் தலைமை மீண்டும் வாய்ப்பு அளித்துள்ளது.