

தூத்துக்குடி மாவட்டம் வைகுண்டம் அருகே உள்ளபுதுக்குடியில் மின்னல் தாக்கியதில் பத்ரகாளி அம்மன் கோயில் கோபுர கலசம், சிமென்ட் சுதை சிற்பங்கள் சேதமடைந்தன.
வைகுண்டம் சுற்றுவட்டாரப் பகுதிகளில் நேற்று அதிகாலையில் இடி மின்னலுடன் கனமழை பெய்தது. வைகுண்டம் அருகே உள்ள புதுக்குடி பத்திர காளியம்மன் கோயில் கோபுரத்தில் மின்னல் தாக்கியதில் கோபுரத்தின் உச்சியில் இருந்த ஒரு கலசம் சேதமடைந்தது. மேலும் கோபுரத்தைச் சுற்றிலும் இருந்த சிமென்டாலான சுதை சிற்பங்கள் சேதமடைந்தன.
சிவராத்திரியை முன்னிட்டு கோயிலின் உள்ளே இருந்த பத்துக்கும் மேற்பட்ட பெண்களும், குழந்தைகளும் மின்னல் தாக்கிய சத்தத்தை கேட்டு அதிர்ச்சி அடைந்து வெளியே ஓடி வந்தனர்.