

தொலைநோக்கு திட்டம்-2023 இலக்குகளை எட்டுவதற்கு மேற் கொள்ளப்பட்ட நடவடிக்கைகள் குறித்த விரிவான வெள்ளை அறிக்கையை வெளியிட வேண்டும் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் நேற்று வெளியிட்ட அறிக்கையில் கூறி யிருப்பதாவது:
தமிழகத்தை வளர்ச்சியடைந்த மாநிலமாக மாற்றுவதற்கான தொலைநோக்குத் திட்டம் (விஷன்)-2023 என்ற வளர்ச்சி திட்ட அறிக்கை 2012-ம் ஆண்டு மார்ச் மாதம் 22-ம் தேதி வெளியிடப்பட்டது.
இந்த திட்டம் செயல்படுத்தப் பட்டால் 2023-ம் ஆண்டில் தமிழகத் தில் வறுமையே இருக்காது. வளமை யும், செழுமையும் பொங்கி வழியும் என்றெல்லாம் சொல்லப்பட்டது.
திட்டத்தின் கீழ் செயல் படுத்தப்படவுள்ள பணிகள் குறித்த இரண்டாம் கட்ட அறிக்கையை 2014-ம் ஆண்டு பிப்ரவரி 22-ம் தேதி வெளியிட்டதைத் தவிர இதுவரை வேறு எந்த நடவடிக்கையையும் மேற்கொள்ளவில்லை. தொலை நோக்குத் திட்டம் அறிவிக்கப்பட்டு 45 மாதங்கள் நிறைவடைந்து விட்டன. ஆனால், திட்டத்திற்கு செயல்வடிவம் கொடுப்பதற்கான முதல் அடியைக் கூட தமிழக அரசு எடுத்து வைக்கவில்லை. இது கண்டிக் கத்தக்கதாகும்.
நான்காண்டு ஆட்சி. நாலாபுற வளர்ச்சி என்று கூறும் தமிழக அரசு, தொலைநோக்குத் திட்டம் - 2023 இலக்குகளை எட்டுவதற் காக கடந்த நான்கு ஆண்டு களில் மேற்கொள்ளப்பட்ட நடவடிக் கைகள் குறித்து விரிவான வெள்ளை அறிக்கை வெளியிடத் தயாரா? என்பதை சவாலாகவே முன்வைக் கிறேன்.
இவ்வாறு ராமதாஸ் தெரிவித்துள்ளார்.