புதுக்கோட்டை மாவட்டத்தில் 6 தொகுதிகளிலும் யாரும் வேட்புமனு தாக்கல் செய்யவில்லை

புதுக்கோட்டை மாவட்டத்தில் 6 தொகுதிகளிலும் யாரும் வேட்புமனு தாக்கல் செய்யவில்லை
Updated on
1 min read

தமிழக சட்டப்பேரவைத் தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் நேற்று தொடங்கியது. மார்ச் 19-ம் தேதி முடிவடைகிறது. ஏப்.6-ம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது. மே 2-ம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெற உள்ளது.

புதுக்கோட்டை மாவட்டத்தில் கந்தர்வக்கோட்டை (தனி) தொகுதிக்கு கந்தர்வக்கோட்டை வட்டாட்சியர் அலுவலகமும், விராலிமலை தொகுதிக்கு இலுப்பூர் கோட்டாட்சியர் அலுவலகமும், புதுக்கோட்டைக்கு புதுக்கோட்டை கோட்டாட்சியர் அலுலகமும், திருமயத்துக்கு திருமயம் வட்டாட்சியர் அலுவலகமும், ஆலங்குடிக்கு ஆலங்குடி வட்டாட்சியர் அலுவலகமும், அறந்தாங்கிக்கு அறந்தாங்கி சார் ஆட்சியர் அலுவலகமும் தேர்தல் நடத்தும் அலுவலரின் அலுவலகமாக செயல்படுகிறது.

இங்குதான் அந்தந்த தொகுதிகளில் போட்டியிடுவோர் வேட்புமனுக்களை தாக்கல் செய்வர். வேட்புமனு தாக்கல் செய்வதற்கு தொடக்க நாளான இன்று (மார்ச் 12) 6 இடங்களிலும் அதற்கான முன்னேற்பாடுகள் தயார் நிலையில் இருந்தன.

இந்த அலுவலக வளாகங்கள் துணை ராணுவம், துப்பாக்கி ஏந்திய போலீஸாரின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டன.பொதுமக்களையும் பரிசோதனைக்குப் பின்னரே அனுமதிக்கப்பட்டனர்.

மேலும், அங்கிருந்கு குறிப்பிட்ட தூரம் முன்னதாகவே போலீஸாரை நிறுத்தி, வேட்புமனு தாக்கல் செய்வதற்காக வருவோர் விதிகளை மீறி யாரேனும் செயல்படுகின்றனரா எனவும் கண்காணிக்கப்பட்டனர். இதுதவிர, ரோந்து பணியிலும் போலீஸார் ஈடுபட்டனர். எனினும், ஒருவர்கூட வேட்புமனுவைத் தாக்கல் செய்யவில்லை.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in