குதிரையில் வந்து வேட்பு மனு தாக்கல் செய்த படுக தேச பார்ட்டி நிறுவன தலைவர்

குதிரையில் வந்த மஞ்சை வி.மோகன்.
குதிரையில் வந்த மஞ்சை வி.மோகன்.
Updated on
1 min read

உதகை சட்டப்பேரவை தொகுதியில் முதல் நபராக குதிரையில் வந்து வேட்பு மனுவை தாக்கல் செய்தார் படுக தேச பார்ட்டி நிறுவன தலைவர் மஞ்சை வி.மோகன்.

தமிழக சட்டப்பேரவை தேர்தலுக்கான வேட்பு மனு தாக்கல் இன்று (மார்ச் 12) தொடங்கியது. நீலகிரி மாவட்டத்தில் உள்ள உதகை, குன்னூர் மற்றும் கூடலூர் ஆகிய சட்டப்பேரவை தொகுதிகளில் முதல் நாளில் ஒருவர் மட்டுமே வேட்பு மனு தாக்கல் செய்தார்.

வேட்பு மனு தாக்கல் செய்யும் போது, வாக்காளர்களின் கவனத்தை ஈர்க்க சிலர் வித்தியாசமான அணுகுமுறைகளை கையாளுவார்கள். அந்த வகையில், படுக தேச பார்ட்டி என்ற கட்சியின் நிறுவன தலைவர் மஞ்சை வி.மோகன் முதல் ஆளாக, இன்று உதகை சட்டப்பேரவை தொகுதியில் போட்டியிட வேட்பு மனுவை தாக்கல் செய்தார்.

வேட்பு மனு தாக்கல் செய்ய வேண்டிய கோட்டாட்சியர் அலுவலகத்துக்கு உதகை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திலிருந்து குதிரையில் சவாரி செய்தவாறு வந்த மஞ்சை வி.மோகன், கோட்டாட்சியர் மோனிகா ரானாவிடம் தனது வேட்பு மனுவை தாக்கல் செய்தார்.

உதகை சட்டப்பேரவை தொகுதி அதிமுக மற்றும் திமுக கூட்டணியில், கூட்டணி கட்சிகளான பாஜக மற்றும் காங்கிரசுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், அக்கட்சிகள் வேட்பாளர்களை அறிவிக்கவில்லை. மக்கள் நீதி மய்யம் சார்பில் மாவட்ட செயலாளர் சுரேஷ் பாபு வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in