திமுக வேட்பாளர் பட்டியல் வெளியீடு: கொளத்தூரில் ஸ்டாலின், சேப்பாக்கத்தில் உதயநிதி போட்டி: முக்கிய வேட்பாளர்கள் விவரம்

திமுக வேட்பாளர் பட்டியல் வெளியீடு: கொளத்தூரில் ஸ்டாலின், சேப்பாக்கத்தில் உதயநிதி போட்டி: முக்கிய வேட்பாளர்கள் விவரம்
Updated on
1 min read

திமுக வேட்பாளர் பட்டியல் வெளியானது. கூட்டணிக்கட்சிகளுடன் தொகுதி பங்கீட்டை முடித்த நிலையில் திமுக 173 தொகுதிகளில் போட்டியிடுகிறது. இதற்கான வேட்பாளர் பட்டியலை திமுக தலைவர் ஸ்டாலின் வெளியிட்டார். ஸ்டாலின் கொளத்தூரிலும், முதன் முறையாக உதயநிதி சேப்பாக்கத்திலும் போட்டியிடுகின்றனர்.

திமுக கூட்டணி தோழமைக் கட்சிகளான காங்கிரஸ், மதிமுக, இடதுசாரிகள், விசிக உள்ளிட்ட கட்சிகளுடன் இணைந்து களம் காண்கிறது. இதில் திமுக மட்டும் 173 தொகுதிகளில் போட்டியிடுகிறது. இதற்கான பட்டியல் 2 நாட்களுக்கு முன்னரே வெளியாகும் என எதிர்ப்பார்த்த நிலையில் இன்று வெளியிடப்பட்டது. திமுக சார்பாக 173 தொகுதிகளில் போட்டியிடும் வேட்பாளர்கள் பட்டியலை திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் இன்று (மார்ச் 12) வெளியிட்டார்.

இதில் திமுக கூட்டணியில் சேப்பாக்கம் -திருவல்லிக்கேணி தொகுதியில் உதயநிதி போட்டியிடுவார் என பேசப்பட்டது. ஆனால் அவர் பிரச்சாரத்திற்கு செல்ல உள்ளதால் போட்டியிட வாய்ப்பில்லை எனக்கூறப்பட்டது. ஆனால் நேர்க்காணலில் உதயநிதி மட்டுமே பங்கேற்றார்.

ஆனாலும் நேர்க்காணலில் பங்கேற்பவர்கள் வேறு யாரையாவது பரிந்துரைக்கலாம் என்பதால் அவர் போட்டியிட மாட்டார் மஸ்தான், ஜின்னா அல்லது மதன் போன்றோருக்கு வாய்ப்பு வழங்கப்படும் என தகவல் வெளியானது. ஆனால் அவர் போட்டியிடுகிறார் என தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி

கொளத்தூர்- ஸ்டாலின்,

சேப்பாக்கம்- உதயநிதி ஸ்டாலின்

காட்பாடி - துரைமுருகன்

திருச்சி மேற்கு- கே.என்.நேரு

திருக்கோவிலூர் -பொன்முடி

ஆத்தூர் (திண்டுக்கல்)- ஐ.பெரியசாமி

துறைமுகம்- சேகர் பாபு

சைதாப்பேட்டை- மா.சுப்ரமணியம்

தி.நகர் - ராஜா அன்பழகன்

மயிலாப்பூர் - த.வேலு

ஆயிரம் விளக்கு - எழிலன்

திருவெறும்பூர் - அன்பில் பொய்யாமொழி

முதுகுளத்தூர் - ராஜகண்ணப்பன்

திருவண்ணாமலை - எ.வ.வேலு

கரூர் - செந்தில் பாலாஜி

ஆகியோர் முக்கிய வேட்பாளர்கள் ஆவர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in