தமிழகம் முழுவதும் வேட்பு மனுத் தாக்கல் தொடங்கியது: ஆன்லைனிலும் தாக்கல் செய்யலாம்

தமிழகம் முழுவதும் வேட்பு மனுத் தாக்கல் தொடங்கியது: ஆன்லைனிலும் தாக்கல் செய்யலாம்
Updated on
1 min read

தமிழகம் முழுவதும் சட்டப்பேரவை தேர்தலுக்கான வேட்பு மனுத்தாக்கல் இன்று முதல் தொடங்கியது. ஆன்லைனிலும் வேட்பாளர்கள் வாக்களிக்கலாம். பிஹாரை தொடர்ந்து தமிழகத்தில் முதல்முறையாக இந்த முறை அமலாகிறது.

தமிழகத்தில் சட்டப்பேரவை தேர்தல் குறித்த அறிவிப்பு கடந்த பிப்ரவரி 26 அன்று வெளியிடப்பட்டது. அதன்படி ஏப்.6 வாக்குப்பதிவு, மே.2 வாக்கு எண்ணிக்கை என அறிவிக்கப்பட்டது. ஒரே கட்டமாக தேர்தல் 234 தொகுதிகளுக்கும் தேர்தல் நடக்கும் என அறிவிக்கப்பட்டது.

வேட்பு மனுத் தாக்கல் இன்று தொடங்குகிறது வேட்பு மனுத் தாக்கல் செய்ய கடைசி நாள் மார்ச் 19. மார்ச் 20 அன்று வேட்பு மனு பரிசீலனை நடக்கும், வேட்புமனு திரும்பப் பெற கடைசி நாள் மார்ச் 22 ஆகும்.
வேட்புமனு தாக்கல் தினமும் காலை 11-00 மணி முதல் 3-00 மணி வரை மட்டுமே அனுமதிக்கப்படுவர்.

சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் வேட்பு மனுத்தாக்கல் கிடையாது. வேட்பு மனுத்தாக்கல் செய்ய வரும் வேட்பாளர்கள் தன்னுடன் 2 பேரை மட்டுமே அழைத்துவர அனுமதி, தன்னுடன் இரண்டு வாகனங்களில் மட்டுமே வர அனுமதி உள்ளிட்ட பல கட்டுப்பாடுகளை தேர்தல் ஆணையம் விதித்தது.

இது தவிர முதன் முறையாக ஆன்லைனில் வேட்பு மனுக்களை தரவிறக்கம் செய்து ஆன்லைனிலேயே வேட்பு மனுவும் தாக்கல் செய்யும் முறையையும் தேர்தல் ஆணையம் அறிமுகப்படுத்தியுள்ளது. வேட்பாளர் வைப்புத்தொகை 10 ஆயிரம் எனவும், பட்டியல் இனத்தவருக்கு ரூ.5000 எனவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

வேட்புமனுத் தாக்கல் இன்று முதல் நாள் என்றாலும் பிரதான கட்சிகள் இன்று தாக்கல் செய்ய வாய்ப்பு குறைவு என்றும் நாளையும், நாளை மறுநாளும் வேட்பு மனு தாக்கல் செய்ய முடியாது என்பதாலும் திங்கட் கிழமை அதிக அளவில் வேட்புமனு தாக்கல் நடக்கும் என தெரிகிறது.

வேட்புமனுத் தாக்கல் தொடங்கிய முதல் நாள் அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓபிஎஸ் மனுதாக்கல் செய்ய உள்ளார். அவர் போட்டியிடும் போடி தொகுதியில் இன்று 12-00 மணிக்கு மேல் வேட்மனு தாக்கல் செய்கிறார். முதல்வர் பழனிசாமி மார்ச் 15 அன்று வேட்பு மனுத் தாக்கல் செய்ய உள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in