

சென்னையில் பெய்த கன மழை யால் மளிகை பொருட்கள் விலை யில் மாற்றம் ஏதும் ஏற்படவில்லை என்று தமிழ்நாடு அனைத்து மளிகை வியாபாரிகள் சங்கம் தெரிவித் துள்ளது.
சென்னை மற்றும் தமிழகத்தின் பல்வேறு பகுதிகள், ஆந்திரம் மற் றும் கர்நாடக மாநிலங்களில் கடந்த 10 நாட்களாக பெய்து வந்த கன மழையால் காய்கறிகள் உற்பத்தி பாதிக்கப்பட்டு, அவற்றின் விலை ஏற்றம் கண்டது. இதனால் பொது மக்கள் பாதிப்புக்கு உள்ளாகினர்.
இந்நிலையில் மளிகை பொருட் களின் விலையும் உயர்ந்துள்ளதா என்பது குறித்து தமிழ்நாடு அனைத்து மளிகை வியாபாரிகள் சங்கத் தலைவர் எஸ்.பி.சொரூபன் கூறியதாவது:
தீபாவளியின்போது ‘தீபாவளி பண்டு’ என்ற பெயரில் பொது மக்களுக்கு 25 வகையான மளிகை பொருட்கள் கொண்ட பேக்கேஜ் கொடுக்கப்பட்டுவிட்டன. பலத்த மழை காரணமாக பொதுமக்களும் வெளியில் வரவில்லை. இதனால் கடந்த 15 நாட்களாக மளிகை பொருட்கள் விற்பனை மந்தமாக உள்ளது.
வழக்கமாக ஜனவரிக்கு பிறகே அறுவடை பொருட்கள் வரும். அத னால் நவம்பர், டிசம்பர் மாதங்களில் மளிகை பொருட்கள் இருப்பு வைக் கப்பட்டு, விலையேற்றம் ஏற்படும். தற்போது மளிகை பொருட்கள் விற் பனை மந்தமாக இருப்பதால், வியா பாரிகள் யாரும் பொருட்களை இருப் பில் வைக்கவில்லை. அதனால் தற்போது மளிகை பொருட்களின் விலை ஏற்றம் அடையவில்லை.
தற்போது ரூபாளி பொன்னி அரிசி, 25 கிலோ கொண்ட மூட்டை ரூ.800, டீலக்ஸ் என்ற அதிசய பொன்னி ரூ.950, பாபட்லா பொன்னி ரூ.1100, வெள்ளை பொன்னி ரூ.1400, இட்லி அரிசி ரூ.900, பச்சரிசி ரூ.800-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
சூரியகாந்தி எண்ணெய் முதல் தரம் ஒரு லிட்டர் ரூ.84, 2-ம் தரம் ரூ.77, பாமாயில் ரூ.50, கடலை எண்ணெய் ரூ.110-க்கு விற்கப்படுகிறது. இந்திய துவரம் பருப்பு கிலோ ரூ.170, தான்சானியா துவரம் பருப்பு ரூ.130, உளுத்தம் பருப்பு முதல் தரம் ரூ.170, 2-ம் தரம் ரூ.155, பாசி பருப்பு முதல் தரம் ரூ.120, 2-ம் தரம் ரூ.105, கடலை பருப்பு முதல் தரம் ரூ.75, 2-ம் தரம் ரூ.70, சர்க்கரை ரூ.32, சேலத்து வெள்ளம் ரூ.40, வேலூர் வெள்ளம் ரூ.50, மிளகாய் முதல் தரம் ரூ.140, 2-ம் தரம் ரூ.110, மலை பூண்டு ரூ.160, நாட்டு பூண்டு ரூ.140, புளி ரூ.120 என விலை உள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.