Published : 12 Mar 2021 03:12 AM
Last Updated : 12 Mar 2021 03:12 AM

அமமுகவின் 2-வது வேட்பாளர்கள் பட்டியல் வெளியீடு: டிடிவி.தினகரன் கோவில்பட்டியில் போட்டி

அமமுக பொதுச் செயலாளர் டிடிவி.தினகரன் கோவில்பட்டியில் போட்டியிடுகிறார். நேற்று முற்பகலில் கட்சியில் சேர்ந்த சாத்தூர் தொகுதி எம்.எல்.ஏ. ராஜவர்மனுக்கு மீண்டும் அதே தொகுதியில் அமமுக சார்பில் போட்டியிட பிற்பகலில் வாய்ப்பு அளிக்கப்பட்டது.

அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களின் 2-வது பட்டியல் நேற்று வெளியிடப்பட்டது. இப்பட்டியலில் 50 பேர் இடம்பெற்றுள்ளனர். இதுகுறித்து அக்கட்சியின் தலைமைக் கழகம் நேற்று வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

அமமுக பொதுச் செயலாளர் டிடிவி.தினகரன் கோவில்பட்டி தொகுதியில் போட்டியிடுகிறார். குடியாத்தத்தில் முன்னாள் எம்.எல்.ஏ. சி.ஜெயந்தி பத்மநாபன், ராமநாதபுரத்தில் மண்டபம் ஜி.முனியசாமி, திருப்போரூரில் முன்னாள் எம்.எல்.ஏ. எம்.கோதண்டபாணி, திருப்பரங்குன்றத்தில் கே.டேவிட் அண்ணாதுரை, மானாமதுரையில் முன்னாள் எம்.எல்.ஏ. எஸ்.மாரியப்பன் கென்னடி ஆகியோர் போட்டியிடுகின்றனர்.

தாம்பரத்தில் ம.கரிகாலன், திருவையாறில் வேலு கார்த்திகேயன், தியாகராயநகரில் ஆர்.பரணீஸ்வரன், திருப்பூர் தெற்கில் முன்னாள் மேயர் ஏ.விசாலாட்சி, விழுப்புரத்தில் ஆர்.பாலசுந்தரம், சாத்தூரில் எம்.எஸ்.ஆர்.ராஜவர்மன், பொன்னேரியில் (தனி) முன்னாள் எம்.எல்.ஏ. பொன்.ராஜா, பூந்தமல்லியில் (தனி) முன்னாள் எம்.எல்.ஏ. டி.ஏ.ஏழுமலை, அம்பத்தூரில் முன்னாள் எம்.எல்.ஏ. எஸ்.வேதாச்சலம்,

சேலம் தெற்கு தொகுதியில் முன்னாள் எம்.எல்.ஏ. எஸ்இ.வெங்கடாசலம் ஆகியோர் போட்டியிடுகின்றனர்.

கிணத்துக்கடவில் முன்னாள் எம்.எல்.ஏ. எம்பி.ரோஹினி கிருஷ்ணகுமார், மண்ணச்சநல்லூரில் முன்னாள் எம்.எல்.ஏ. தொட்டியம் எம்.ராஜசேகரன், முதுகுளத்தூரில் முன்னாள் எம்.எல்.ஏ. எம்.முருகன், மதுரவாயலில் இ.லக்கி முருகன், மாதவரத்தில் டி.தட்சிணாமூர்த்தி, பெரம்பூரில் இ.லட்சுமி நாராயணன், சேப்பாக்கம் திருவல்லிக்கேணியில் எல்.ராஜேந்திரன், அணைக்கட்டில் வி.டி.சத்யா என்கிற சதீஷ்குமார், திருப்பத்தூரில் (திருப்பத்தூர் மாவட்டம்) ஏ.ஞானசேகர், பர்கூரில் எஸ்.கணேசகுமார், ஓசூரில் எம்.மாரே கவுடு, செய்யாறில் மா.கி.வரதராஜன், செஞ்சியில் ஏ.கவுதம் சாகர், ஓமலூரில் கே.கே.மாதேஸ்வரன் ஆகியோர் போட்டியிடுகின்றனர்.

எடப்பாடி தொகுதியில் பூக்கடை என்.சேகர், பரமத்திவேலூரில் பி.பி.சாமிநாதன், திருச்செங்கோட்டில் ஆர்.ஹேமலதா, அந்தியூரில் எஸ்.ஆர்.செல்வம், குன்னூரில் எஸ்.கலைச்செல்வன், பல்லடத்தில் ஆர்.ஜோதிமணி, கோவை வடக்கில் என்.ஆர்.அப்பாதுரை, திண்டுக்கல்லில் பி.ராமுத்தேவர், மன்னார்குடியில் எஸ்.காமராஜ், ஒரத்தநாட்டில் மா.சேகர், காரைக்குடியில் தேர்போகி வி.பாண்டி, ஆண்டிபட்டியில் ஆர்.ஜெயக்குமார், போடிநாயக்கனூரில் எம்.முத்துச்சாமி, வில்லிபுத்தூரில் எஸ்.சங்கீதப்பிரியா சந்தோஷ்குமார், சிவகாசியில் கு.சாமிக்காளை, திருவாடனை தொகுதியில் வி.டி.என். ஆனந்த், விளாத்திகுளத்தில் கே.சீனிச்செல்வி, கன்னியாகுமரியில் பி.செந்தில்முருகன், நாகர்கோவில் தொகுதியில் ரோஸ்லின் அமுதராணி என்கிற அம்மு அண்ட்ரோ ஆகியோர் போட்டியிடுகின்றனர் என்று அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

முதல் பட்டியலில் 15 பேரும், 2-வது பட்டியலில் 50 பேரும் ஆக மொத்தம் 65 அமமுக வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர்.

எஸ்டிபிஐ-க்கு 6 தொகுதிகள் ஒதுக்கீடு

அமமுக சோசியல் டெமாக்ரடிக் பார்ட்டி ஆப் இந்தியா-தமிழ்நாடு (எஸ்டிபிஐ) கட்சியுடன் கூட்டணி அமைத்துள்ளது. 2 கட்சிகளுக்கிடையே ஏற்பட்ட ஒப்பந்தத்தின்படி ஆலந்தூர், ஆம்பூர், திருச்சி மேற்கு, திருவாரூர், மதுரை மத்தியம், பாளையங்கோட்டை ஆகிய 6 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன. இதற்கான ஒப்பந்தத்தில் அமமுக பொதுச் செயலாளர் டிடிவி.தினகரனும், எஸ்டிபிஐ கட்சியின் மாநிலத் தலைவர் நெல்லை முபாரக்கும் கையெழுத்திட்டுள்ளனர் என்று அமமுக தலைமைக் கழக அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

காலையில் கட்சி மாறினார் மாலையில் வேட்பாளரானார்

விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே உள்ள மல்லி கிராமத்தைச் சேர்ந்தவர் ராஜவர்மன்(48). அதிமுகவில் பல்வேறு பொறுப்புகளை வகித்துள்ளார். சாத்தூர் தொகுதி எம்எல்ஏவாக இருந்த எஸ்.ஜி.சுப்பிரமணியன், ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு அமமுகவில் இணைந்ததால், தகுதி நீக்கம் செய்யப்பட்ட நிலையில், 2019-ல் சாத்தூரில் நடந்த இடைத்தேர்தலில் ராஜவர்மன் அதிமுக சார்பில் போட்டியிட்டு வெற்றிபெற்றார்.

பின்னர், எஸ்.ஜி.சுப்பிரமணியன் மீண்டும் அதிமுகவில் இணைந்தார். இதையடுத்து, அமைச்சர் கே.டி.ராஜேந்திர பாலாஜிக்கும் ராஜவர்மனுக்கும், இடையே மோதல் வெடித்தது. அமைச்சர் கே.டி.ராஜேந்திர பாலாஜி தனக்கு கொலை மிரட்டல் விடுத்ததாக ராஜவர்மன் வெளிப்படையாகவே குற்றம்சாட்டும் அளவுக்கு மோதல் வளர்ந்தது.

இதற்கிடையே, அதிமுக வேட்பாளர் பட்டியலில் தனது பெயர் இல்லாததால் அதிருப்தி அடைந்த ராஜவர்மன், நேற்று அமமுக பொதுச் செயலாளர் தினகரனைச் சந்தித்து அக்கட்சியில் இணைந்தார். இதையடுத்து அவர் அதிமுகவின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பிலிருந்து நீக்கப்பட்டார்.

இந்நிலையில், நேற்று மாலை அமமுக சார்பில் சாத்தூர் தொகுதி வேட்பாளராக அவர் அறிவிக்கப்பட்டுள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x