தேங்கி கிடந்த மழை நீரில் விழுந்த 2 வயது குழந்தை பலி

தேங்கி கிடந்த மழை நீரில் விழுந்த 2 வயது குழந்தை பலி
Updated on
1 min read

பள்ளிக்கரணையில் வீட்டு முன்பு தேங்கி கிடந்த மழை நீரில் விழுந்து மூழ்கிய 2 வயது குழந்தை பரிதாபமாக உயிரிழந்தது.

சென்னை பள்ளிக்கரணை காமாட்சி காலனி 3-வது தெருவில் வசிப்பவர் ஜானகிராமன். இவரது மனைவி அகிலாண்டேஸ்வரி. இவர்களுக்கு 2 மகன்கள். இரண் டாவது மகன் லோகேஷ் (2). நேற்று காலையில் ஜானகிராமன் வழக்கம்போல எலக்ட்ரீசியன் வேலைக்கு சென்று விட்டார். கடந்த சில நாட்களாக சென்னை யில் பெய்து வரும் கனமழையால் பல இடங்களில் தண்ணீர் தேங்கியுள்ளது. ஜானகிராமன் வீட்டு முன்பும் ஒரு அடி ஆழத் துக்கு தண்ணீர் தேங்கி கிடக்கிறது.

நேற்று காலையில் அகிலாண் டேஸ்வரி கவனிக்காத நேரத்தில் லோகேஷ் வீட்டை விட்டு வெளியே வந்து தேங்கி கிடந்த மழை நீரில் விளையாடியிருக்கிறான். அப்போது கால் தவறி தண்ணீ ரில் விழுந்து மூழ்கியதாக கூறப் படுகிறது. சிறிது நேரம் கடந்த நிலையில் மகனை அகிலாண் டேஷ்வரி தேட, வீட்டு முன்பு தண்ணீரில் மிதந்திருக்கிறான் லோகேஷ். உடனே லேகேஷை எடுத்துக் கொண்டு அருகே உள்ள தனியார் மருத்துவமனைக்கு செல்ல, குழந்தை இறந்து விட்டதாக டாக்டர்கள் தெரிவித்துள்ளனர்.

இந்த சம்பவம் குறித்து பள்ளிக்கரணை போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in