

தெற்கு ரயில்வே நேற்று வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:
சபரிமலை பக்தர்கள் மற்றும் கிறிஸ்துமஸ் பண்டிகையொட்டி நாகர்கோவிலில் இருந்து மங்களூருக்கு சிறப்பு ரயில்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. அதன்படி, அடுத்த மாதம் 20, 27, ஜனவரி 3-ம் தேதிகளில் நாகர்கோவில் இருந்து மதியம் 2 மணிக்கு புறப்படும் சிறப்பு ரயில் (06142) மறுநாள் காலை 5.15 மணிக்கு மங்களூரை சென்றடையும்.
இதேபோல், அடுத்த மாதம் 21, 28, ஜனவரி 4-ம் தேதிகளில் மங்களூரில் இருந்து மதியம் 12.30 மணிக்கு புறப்படும் சிறப்பு ரயில் (06143) மறுநாள் அதிகாலை 2.50 மணிக்கு நாகர்கோவிலை சென்றடையும். மேற்கண்ட சிறப்பு ரயில்களுக்கான முன்பதிவு 27-ம் தேதி (இன்று) தொடங்குகிறது.
இவ்வாறு அதில் கூறப் பட்டுள்ளது.