

கோவை வேடப்பட்டி அருகே குடியிருப்புப் பகுதியில் மர நாய் (Asian palm civet) இருப்பதாக வனத் துறைக்கு தகவல் கிடைத்தது.
இதையடுத்து, அங்கு சென்ற வனக் காவலர் செல்வராஜ் மற்றும் வனத் துறையின் துரித மீட்புக் குழுவினர் (ஆர்.ஆர்.டி.) மர நாயை பத்திரமாக மீட்டனர். பின்னர், அது ஆனைகட்டி சாலையில் மாங்கரையை அடுத்த சேம்புக்கரை வனப் பகுதியில் பாதுகாப்பாக விடுவிக்கப்பட்டது.
இதுகுறித்து வனத் துறையினர் கூறும்போது, "அடிபட்டுள்ள பறவைகள், குடியிருப்புப் பகுதியில் நுழைந்த வன விலங்குகளை மீட்க ஆர்.ஆர்.டி.குழு செயல்பட்டு வருகிறது. எனவே, பொதுமக்கள் 0422-2456922, 1800-42545456 என்ற எண்களில் தொடர்புகொண்டு, தகவல் தெரிவிக்கலாம்" என்றனர்.