செங்கல்பட்டில் தேர்தல் பிரச்சாரம்: நேரக் கட்டுப்பாட்டை மீறிய சீமான் மீது போலீஸ் வழக்கு

செங்கல்பட்டில் பிரச்சாரம் மேற்கொண்ட சீமான்.
செங்கல்பட்டில் பிரச்சாரம் மேற்கொண்ட சீமான்.
Updated on
1 min read

செங்கல்பட்டு சட்டப்பேரவை தொகுதியில் நாம் தமிழர் வேட்பாளர் சஞ்சீவிநாதன் போட்டியிடுகிறார். இவரை ஆதரித்து கட்சி ஒருங்ணைப்பளர் சீமான் செங்கல்பட்டில் பிரச்சாரம் மேற்கொண்டார்.

முன்னதாக காஞ்சிபுரத்தில் பிரச்சாரத்தை முடித்துவிட்டு செங்கல்பட்டு புறப்பட்டார். பழைய பேருந்து நிலையம் அருகே அவருக்காக கட்சியினர் காத்திருந்தனர். அப்போது மணி 10-ஐ கடந்ததால் காவலர்கள் மின் விளக்குகளை துண்டித்தனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. பின்னர் தாமதமாக பிரச்சார இடத்துக்கு திறந்தவெளி வேனில் வந்த சீமான் செங்கல்பட்டு தொகுதி வேட்பாளர் சஞ்சீவிநாதனை ஆதரித்து பிரச்சாரம் செய்தார்.

அப்போது அவர் பேசும்போது, "விவசாயி நலமுடனும் வளமுடனும் இருக்க வேண்டும். விவசாயி நலமுடன் இல்லா விட்டால் நாளடைவில் சோறுகூட கிடக்க வாய்ப்பு இல்லை. பணநாயகத்தை ஒழித்து, மேம்பட்ட ஜனநாயகத்தை செழிக்க வைப்போம். விவசாயிகளின் குடிமகனாகிய நாங்கள் நல்லாட்சி தர ஆதரவு தர வேண்டும்" என்றார்.

இந்நிலையில் தேர்தல் விதிமுறையை மீறி இரவு 10 மணிக்கு மேல் பிரச்சாரம் மேற்கொண்டதற்காக சீமான் மீது செங்கல்பட்டு நகர காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in