கடலூரில் வனத்துறையினர் ஆமைக்குஞ்சுகளை கடலில் விட்டனர்

கடலூரில் வனத்துறையினர் ஆமைக்குஞ்சுகளை கடலில் விட்டனர்
Updated on
1 min read

கடலூர் தேவனாம்பட்டினம் கடலில்வனத் துறையினர் 113 ஆமைக்குஞ்சு களை கடலில் விட்டனர்.

ஆமைகளின் இனப்பெருக்கத்தை காக்கும் வகையில் கடலூர் மாவட்ட வன அலுவலர் செல்வம் வழிகாட்டலின் படி கடந்த 3 மாதமாக கடலூர் கடற்கரை பகுதியில் ஆலிவ் ரிட்லி ரக 3 ஆயிரம் ஆமை முட்டைகளை சேகரித்துள்ளனர்.

தேவனாம்பட்டினம் கடற்கரை பகுதியில் உள்ள செயற்கை பொறிப் பகத்தில் வைத்து பாதுகாத்து வரு கின்றனர்.

கடலூர் வனசரக அலுவலர் அப்துல்ஹமீது, வனவர் குணசேகரன், வனக்காப்பாளர் மாரியப்பன் ஆகியோர் கொண்ட குழுவினர் நேற்று செயற்கை பொறிப்பகத்தில் வைக்கப்பட்டிருந்த 3ஆயிரம் முட்டைகளில் பொறித்த 113 ஆமை குஞ்சுகளை தேவனாம்பட்டினம் கடலில் விட்டனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in