

தேனி, ராமநாதபுரம், விருதுநகர், திண்டுக்கல் மாவட்ட அமமுக வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர்.
தேனி மாவட்டம், ஆண்டிபட்டி தொகுதி வேட்பாளராக ஆர்.ஜெயக்குமார்(43) அறிவிக்கப்பட்டுள்ளார். பி.ஏ, பி.எல். படித்துள்ளார். விவசாயம் செய்கிறார். வடக்கு மாவட்ட செயலாளராக உள்ளார்.
போடி தொகுதி வேட்பாளர் மு.முத்துச்சாமி(63). மேலபூலானந்தபுரத்தைச் சேர்ந்தவர். எஸ்.எஸ்.எல்.சி படித்துள்ளார். தெற்கு மாவட்டச் செயலாளராக உள்ளார்.
ராமநாதபுரம் மாவட்டம், திருவாடானை தொகுதி வேட்பாளராக வ.து.ந.ஆனந்த்(40) அறிவிக்கப்பட்டுள்ளார். மணக்குடி கிராமத்தைச் சேர்ந்தவர். பி.இ. படித்துள்ளார். அமமுக மாவட்டச் செயலாளராக உள்ளார்.
ராமநாதபுரம் தொகுதி வேட்பாளர் ஜி.முனியசாமி(62), எஸ்எஸ்எல்சி படித்துள்ளார். தற்போது அமமுக அமைப்புக் கழகச் செயலாளராக உள்ளார். முதுகுளத்தூர் தொகுதி வேட்பாளர் எம்.முருகன்(48). பி.ஏ. படித்துள்ளார். முதுகுளத்தூர் ஒன்றியச் செயலாளராக உள்ளார்.
விருதுநகர் மாவட்டம், சிவகாசி தொகுதி அமமுக வேட்பாளராக ஜி.சாமிக்காளை (56) அறிவிக்கப்பட்டுள்ளார். பி.ஏ. படித்துள்ளார். ரியல் எஸ்டேட் தொழில் செய்கிறார். மத்திய மாவட்டக் கழகச் செயலாளராக உள்ளார்.
வில்லிபுத்தூர் தொகுதி வேட்பாளர் எஸ்.சங்கீதப்பிரியா சந்தோஷ்குமார்(33). டிடிஇடி படித்துள்ளார். ஆயத்த ஆடை தயாரிப்பு தொழில் செய்கிறார். கட்சியின் வத்திராயிருப்பு ஒன்றிய இணைச் செயலாளராக உள்ளார்.
திண்டுக்கல் தொகுதி அமமுக வேட்பாளராக பி.ராமு(63) அறிவிக்கப்பட்டுள்ளார். விவசாயம் செய்கிறார். கட்சியின் திண்டுக்கல் கிழக்கு மாவட்ட அமமுக செயலாளராக உள்ளார்.