சென்னை விமான நிலையத்தில் பரபரப்பு: ரூ.2.40 கோடி மதிப்புள்ள 8 கிலோ தங்கம் பறிமுதல்

சென்னை விமான நிலையத்தில் பரபரப்பு: ரூ.2.40 கோடி மதிப்புள்ள 8 கிலோ தங்கம் பறிமுதல்
Updated on
1 min read

சென்னை விமான நிலையத்தில் ரூ.2.40 கோடி மதிப்புள்ள 8 கிலோ தங்கம் பறிமுதல் செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத் தியுள்ளது.

ஹாங்காங்கில் இருந்து விமானம் ஒன்று சென்னை விமான நிலை யத்துக்கு நேற்று அதிகாலை வந்தது. விமானத்தில் வந்த பயணி களை அதிகாரிகள் சோதனை செய்தபோது சென்னை வண்ணாரப் பேட்டையை சேர்ந்த ரவிபரதன் (32) என்பவர் பதற்றத்துடன் இருந்தார். அவரை தனியாக அழைத்துச் சென்று சோதனை செய்தபோது, சூட்கேஸ் மற்றும் ஆடைகளுக் குள் தலா 100 கிராம் எடையுள்ள 25 தங்கக் கட்டி களை மறைத்து வைத்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதை யடுத்து, அதிகாரிகள் ரவிபரதனை கைது செய்து, அவரிடம் இருந்து 2.5 கிலோ தங்கக் கட்டிகளை பறிமுதல் செய்தனர்.

5.5 கிலோ தங்கம்

அதேபோல் சிங்கப்பூரில் இருந்து விமானம் ஒன்று சென்னை விமான நிலையத்துக்கு நேற்று அதிகாலை வந்தது. விமானத்தில் இருந்து இறங்கி வந்த பயணிகளை சுங்கத் துறை அதிகாரிகள் சோதனை செய்து அனுப்பிக் கொண்டிருந் தனர். அப்போது அதிகாரிகளின் அறையின் அருகில் ஒரு பை கேட்பாரற்று இருந்தது. மெட்டல் டிடெக்டர் மூலமாக சோதனை செய்து வெடிகுண்டு இல்லை என்பதை உறுதி செய்த பின், அதிகாரிகள் அந்த பையை பிரித்துப் பார்த்தனர். அதில் 5.5 கிலோ தங்கக் கட்டிகள் இருந்தது. தீவிர சோதனையால் மாட்டிக் கொள்வோம் என்று பயந்த நபர் கடத்தி வந்த தங்கக் கட்டிகளை பையுடன் விட்டுவிட்டு சென்று இருக்கலாம் என்று அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். தங்கம் கடத்தி வந்த நபரின் உருவம் பதிவாகி இருக்கிறதா? என்று கண்காணிப்பு கேமராக்களில் பதிவான காட்சி களை அதிகாரிகள் ஆய்வு செய்து வருகின்றனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in