

திருச்சி மாநகரில் கடந்த சில நாட்களாக கடுமையான வெயி லால் மக்கள் அவதிப்பட்டு வந்த நிலையில், நேற்று முன்தினம் மாலை பலத்த மழை பெய்தது.
இந்த மழையால் மாநகரின் பெரும்பாலான மக்கள் மகிழ்ச்சி அடைந்த வேளையில், ஆழ்வார் தோப்பு, கிராப்பட்டி ஆகிய பகுதிகளைச் சேர்ந்த மக்கள் கடும் அவதி அடைந்தனர்.
ஆழ்வார்தோப்பு பகுதியில் உள்ள சுரங்கப் பாதையில் நேற்று முன்தினம் தேங்கிய மழைநீர் வெளியேறாமல் தேங்கியதால், சுற்றுப்பகுதி தெருக்களை மழைநீர சூழ்ந்தது. மேலும் பல வீடுகள், கடைகளுக்குள் மழைநீர் புகுந்தது. இதனால், மளிகைக் கடைகள் உட்பட பல்வேறு கடை களில் இருந்த உணவுப் பொருட் கள் தண்ணீரில் மூழ்கி வீணாகின.
இந்நிலையில், ஆழ்வார்தோப்பு பகுதி மக்கள், தண்ணீரில் மூழ்கி வீணாகிய பொருட்களுக்கு மாலை அணிவித்து, அவற்றை எஸ்டிபிஐ கிளைத் தலைவர் அப்துல் ரகுமான் தலைமையில் மாநகராட்சி அரியமங்கலம் கோட்ட அலுவலகத்துக்கு எடுத்துச் சென்று இழப்பீடு வழங்கக் கோரி மனு அளித்தனர்.
இதுதொடர்பாக ஆழ்வார் தோப்பு பகுதி மக்கள் கூறும்போது, “எப்போதெல்லாம் மழை பெய்கிறதோ அப்போதெல்லாம் இந்தச் சுரங்கப் பாதையில் தண்ணீர் தேங்குகிறது.
தேங்கும் நீரை விரைவாக வெளியேற்ற போதிய கட்டமைப்பு வசதி இல்லை. இதுதொடர்பாக பலமுறை மனு அளித்தும் மாநகராட்சி உரிய தீர்வை ஏற்படுத்தவில்லை. இத னால், இப்பகுதி மக்கள் மட்டு மின்றி, அந்த சுரங்கப் பாதை யைப் பயன்படுத்தும் அனைத் துத் தரப்பினரும் கடும் அவதிக் குள்ளாகின்றனர்” என்றனர்.
கிராப்பட்டியில்..
இதேபோல, திருச்சி- மதுரை பழைய தேசிய நெடுஞ்சாலையில் கிராப்பட்டி- எடமலைப்பட்டிபுதூர் இடையே உள்ள மேம்பாலத்துக்கு கீழே உள்ள சுரங்கப் பாதையிலும், கிராப்பட்டி அன்புநகரில் உள்ள சுரங்கப் பாதையிலும் மழைநீர் தேங்கி வெளியேற வழியில்லாமல் கழிவுநீராக மாறியுள்ளது.
இதனால், இந்தச் சுரங்கப் பாதை வழியாக நடந்தும், வாகனங் களிலும் செல்ல முடியாமல் பொதுமக்கள் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.
“மக்களின் வசதிக்காக அமைக் கப்பட்டுள்ள சுரங்கப் பாதைகளில் தேங்கும் மழைநீரை உடனடியாக வெளியேற்ற தொடர்புடைய துறைகள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்கின்றனர் பாதிக்கப்பட்ட மக்கள்.