

தேமுதிக தலைவர் விஜயகாந்த் ஷீரடி சாய்பாபா கோயிலில் சிறப்பு பிரார்த்தனை செய்வதற்காக தனது கட்சி எம்.எல்.ஏ.க்களுடன் இன்று புறப்படுகிறார். இதற்காக தேமுதிக எம்.எல்.ஏ.க்கள் 20 பேர் கோயம் பேட்டிலுள்ள கட்சி அலுவலகத் துக்கு அழைக்கப்பட்டுள்ளனர்.
அங்கிருந்து விஜயகாந்த், பிரேமலதா விஜயகாந்த், தேமுதிக இளைஞரணி தலைவர் சுதீஷ் எம்.எல்.ஏ.க்கள் உடன் சென்னை விமானம் நிலையம் செல்கின்றனர். அங்கிருந்து அவர்கள் விமானம் மூலம் ஷீரடி செல்லவுள்ளனர். விஜயகாந்த் உள்ளிட்டோர் ஷீரடி யில் பூஜை முடித்து இன்று மாலையே சென்னை திரும்பவுள் ளனர்.
சட்டப்பேரவை தேர்தல் நெருங்குகிற நேரத்தில் விஜய காந்த், எம்.எல்.ஏ.க்களுடன் ஷீரடி செல்வது குறித்து தேமுதிக நிர்வாகிகளிடம் கேட்ட போது, “எம்.எல்.ஏ.க்களுடன் ஷீரடி செல்ல வேண்டும் என்று விஜயகாந்த் ஏற்கெனவே முடிவு செய்திருந்தார். அதன்படியே இப்போது செல்கின்றனர். இதற்கு காரணங்கள் ஏதும் கிடையாது” என்றனர்.