Published : 11 Mar 2021 11:20 PM
Last Updated : 11 Mar 2021 11:20 PM

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிப் போட்டியிடும் 6 தொகுதிகள் எவை?- பட்டியல் வெளியீடு

சென்னை

திமுக கூட்டணியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிப் போட்டியிடும் 6 தொகுதிகளின் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.

தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் திமுக, அதிமுக உள்ளிட்ட கட்சிகளின் கூட்டணி முடிவாகி, எத்தனை இடங்களில் போட்டி என்பது முடிவாகிவிட்டது. ஆனால், எந்த தொகுதிகளில் போட்டி என்பது குறித்துத் தொடர் பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது. இந்தப் பேச்சுவார்த்தையில் திமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர்கள் பட்டியல் இன்னும் வெளியிடப்படாமல் உள்ளது.

திமுக கூட்டணியில் போட்டியிடும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு 6 தொகுதிகள் ஒதுக்கப்பட்டன. எந்தெந்த தொகுதிகளில் போட்டி என்பது குறித்த பேச்சுவார்த்தை தற்போது தான் முடிவுக்கு வந்துள்ளது.

அதன்படி திருப்பரங்குன்றம், கந்தர்வக்கோட்டை (தனி), திண்டுக்கல், கோவில்பட்டி, அரூர் (தனி), கீழ்வேளூர் (தனி) ஆகிய தொகுதிகளில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் போட்டியிடுகிறது. விரைவில் இந்தத் தொகுதிகளுக்கான வேட்பாளர் பட்டியல் மார்ச் 13-ம் தேதி வெளியிடப்படும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அறிவித்துள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x