

வரவிருக்கும் தமிழக சட்டப்பேரவைத் தேர்தலை திமுக கூட்டனியில் இருந்து எதிர்கொள்ளும் மதிமுக தனக்கு ஒதுக்கப்பட்ட 6 தொகுதிகளுக்குமான வேட்பாளர் பட்டியலை வெளியிடப்பட்டது. மதிமுக 2 தனி தொகுதிகளிலும், 4 பொது தொகுதிகளிலும் போட்டியிடுகிறது.
திமுக கூட்டணியில் மதிமுகவுக்கு 6 தொகுதிகள் ஒதுக்கப்பட்டன. பாஜக என்ற பொது எதிரியை தமிழகத்தில் காலூன்றவிடாமல் இருக்க தொகுதிகளில் சமரசம் செய்து கொள்வதாகத் தெரிவித்தது. உதயசூரியன் சின்னத்திலேயே போட்டியிடவும் மதிமுக ஒப்புக்கொண்டுள்ளது.
இந்நிலையில், வேட்பாளர் பட்டியலை மதிமுக பொதுச் செயலாளர் வைகோ அறிவித்துள்ளார்.
யார் அந்த 6 வேட்பாளர்கள்?
1. மதுராந்தகம் ( தனி) - மல்லை சி.ஏ. சத்யா
2. சாத்தூர் - டாக்டர் ஏ.ஆர்.ஆர். ரகுராமன்
3. பல்லடம் - க. முத்துரத்தினம்
4. மதுரை தெற்கு - மு. பூமிநாதன்
5. வாசுதேவநல்லூர் (தனி) - டாக்டர் சதன் திருமலைக்குமார்
6. அரியலூர் - வழக்கறிஞர் கு. சின்னப்பா
ஆகியோர் தேர்தலில் களம் காண்கின்றனர். மதுரை தெற்கு தொகுதியிலும், வாசுதேவநல்லூரிலும் மதிமுக வெற்றி வாய்ப்பு பிரகாசமாக இருப்பதாக அக்கட்சி உள்ளூர் நிர்வாகிகள் கூறும் நிலையில், இனி தேர்தல் பிரச்சாரம் அந்தந்த தொகுதிகளில் சூடுபிடிக்கும் என எதிர்பார்க்கலாம்.
திமுக கூட்டணியில் மதிமுக, இந்திய யூனியன் முஸ்லீம் லீக் கட்சிகள் தங்களின் வேட்பாளார் பட்டியலை அறிவித்திருப்பது குறிப்பிடத்தக்கது.