

திமுக கூட்டணியில் விடுதலைச் சிறுத்தைகள் போட்டியிடும் தொகுதிகள் என்னென்ன என்பதை அக்கட்சித் தலைவர் திருமாவளவன் அறிவித்தார். 4 தனி தொகுதிகள், 2 பொது தொகுதிகளில் விசிக போட்டியிடுகிறது.
6 தொகுதிகள் எவை?
1.வானூர் (தனி)
2.அரக்கோணம் (தனி)
3.காட்டுமன்னார் கோயில் (தனி)
4.திருப்போரூர் (பொது)
5.நாகப்பட்டினம் (பொது)
6.செய்யூர் (தனி)
தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் வரும் 6ம் தேதி ஒரேகட்டமாக நடைபெறுகிறது.
இதில் திமுக கூட்டணியில் விசிக, மதிமுக, இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், மனித நேய மக்கள் கட்சி, இந்திய யூனியன் முஸ்லீம் லீக் உள்ளிட்ட கட்சிகள் இடம்பெற்றுள்ளன. இந்நிலையில், விசிக போட்டியிடும் 6 தொகுதிகளை திருமாவளவன் அறிவித்தார். விரைவில் வேட்பாளர்கள் அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.