மதிமுகவில் இவர்கள் 6 பேர் போட்டி? மதுராந்தகத்தில் மல்லை சத்யா களம் காண வாய்ப்பு

மதிமுகவில் இவர்கள் 6 பேர் போட்டி? மதுராந்தகத்தில் மல்லை சத்யா களம் காண வாய்ப்பு
Updated on
1 min read

மதிமுக போட்டியிடும் 6 தொகுதிகளில் உதயசூரியன் சின்னத்தில் வேட்பாளர்கள் நிறுத்தப்படுகின்றனர். இதில் மதிமுகவினர் போட்டியிடும் தொகுதிகள் குறித்த தகவல் வெளியாகியுள்ளது.

திமுக கூட்டணியில் தோழமைக்கட்சிகளில் காங்கிரஸ் தவிர மற்ற கட்சிகளுக்கு தலா 6 தொகுதிகள் ஒதுக்கப்பட்டது. இதில் மதிமுக உதய சூரியன் சின்னத்தில் போட்டியிடுவதென ஒப்பந்தம் ஏற்பட்டது. மற்றக்கட்சிகளில் விசிக, முஸ்லீம் லீக் தனிச் சின்னத்தில் போட்டி எனவும், மமக ஒரு தொகுதியில் உதயசூரியன் ஒரு தொகுதியில் தனிச்சின்னத்திலும் மற்ற சிறிய கட்சிகள் உதயசூரியன் சின்னத்திலும் போட்டி என முடிவானது.

இதில் மதிமுகவுக்கு சாத்தூர், வாசுதேவ நல்லூர்(தனி), மதுரை தெற்கு, பல்லடம் , அரியலூர், மதுராந்தகம் (தனி) உள்ளிட்ட தொகுதிகள் ஒதுக்கப்பட்டன. இந்நிலையில் மதிமுக வேட்பாளர் பட்டியலில் போட்டியிடும் வேட்பாளர்கள் கீழ்கண்டவர்கள் நிற்க வாய்ப்பு இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

சாத்தூர் - டாக்டர் ரகுராம்

வாசுதேவநல்லூர் ( தனி) - சதன் திருமலைக்குமார்

மதுரை தெற்கு - புதூர் பூமிநாதன்

பல்லடம் - மோகன்குமார் அல்லது ஈஸ்வரன்

அரியலூர் - சின்னப்பா

மதுராந்தகம்(தனி) - மல்லை சத்யா

மேற்கண்ட 6 பேர் பெயரகள் அறிவிக்கவே அதிக வாய்ப்புள்ளது என்று கூறப்படுகிறது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in