Published : 11 Mar 2021 03:12 AM
Last Updated : 11 Mar 2021 03:12 AM

செல்போன் கோபுரங்களில் இருந்து வெளியேறும் கதிர்வீச்சால் மக்களுக்கு எந்த பாதிப்பும் ஏற்படாது: தொலைதொடர்புத் துறை விளக்கம்

சென்னை

செல்போன் கோபுரங்களில் இருந்து வெளியேறும் கதிர்வீச்சால்உடல்நலத்துக்கு எந்த பாதிப்பும் ஏற்படாது என்று தமிழ்நாடு தொலைதொடர்புத் துறை தெரிவித்துள்ளது.

முன் எப்போதும் இல்லாத அளவுக்கு தொலைதொடர்பு சேவைகளின் தேவை தற்போது அதிகரித்துஉள்ளது. இதனால், தமிழகத்தில் தொலைதொடர்பு கட்டமைப்பை விரிவுபடுத்தவும், அனைத்து இடங்களிலும் தொலைதொடர்பு இணைப்புகள் சரிவர இயங்குவதற்கு, செல்போன் கோபுரங்களை அதிக எண்ணிக்கையில் அமைக் கவும் வேண்டி உள்ளது.

ஆனால், செல்போன் கதிர்வீச்சுதொடர்பான தவறான தகவல்களால், குடியிருப்பு பகுதிகளில் செல்போன் கோபுரங்கள் அமைப்பதற்கு பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். .

இதனால், செல்போன் கோபுரங்களில் இருந்து வெளியேறும் கதிர்வீச்சு குறித்து மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது. செல்போன் கோபுரங்களில் பயன்படுத்தப்படும் மின்காந்த அலைகள், டிவி, ரேடியோ சிக்னல்கள் போன்றுபாதிப்பு இல்லாத அலைவரிசையாகும். இதுகுறித்து உலக சுகாதாரநிறுவனம் உட்பட பல அறிவியல் அமைப்புகள் ஆய்வு நடத்தி உள்ளன.

செல்போன் கோபுரங்களில் இருந்து வெளியேறும் கதிர்வீச்சால் பாதிப்பு ஏற்படும் என்பதற்கு எந்தஆதாரமும் இல்லை. இந்த விஷயத்தில் மத்திய அரசு கடுமையான விதிமுறைகளைப் பின்பற்றுகிறது.

சர்வதேச தரத்துடன் ஒப்பிடும்போது, தொலைபேசி கோபுரங்களின் கதிர்வீச்சு 10-ல் ஒரு பங்குஅளவுக்கே மத்திய அரசு அனுமதிக்கிறது. அதனால் குடியிருப்பு பகுதிகள், பள்ளிகள், மருத்துவமனைகள், வழிபாட்டுத் தலங்கள் போன்றவற்றுக்கு அருகில் செல்போன் கோபுரங்கள் அமைப்பதால் எந்த பாதிப்பும் ஏற்படாது.

செல்போன் கோபுரங்கள் அமைக்கும் முன், அதிலிருந்து வெளியேறும் கதிர்வீச்சின் அளவுகுறித்த விவரங்களை தொலைதொடர்பு சேவை அளிக்கும் நிறுவனங்கள், தொலைதொடர்புத் துறையிடம் தெரிவிக்க வேண்டும்.

கதிர் வீச்சின் அளவு அனுமதிக்கப்பட்ட வரம்புக்குள் இருக்கிறதா என்பதை தொலைதொடர்புத் துறைஆய்வு மேற்கொண்டு உறுதி செய்கிறது. விரைவில் 5ஜி தொழில்நுட்பம் அறிமுகம் செய்யப்பட உள்ளதால், செல்போன் கோபுரங்களின் எண்ணிக்கையை அடுத்த 2 ஆண்டுக்குள் அதிகரிக்க வேண்டும்.

இதற்கு பொதுமக்கள் உட்படஅனைத்து தரப்பினரும் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என தமிழ்நாடு தொலைதொடர்புத் துறை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x