

சென்னை மயிலாப்பூரில் அமிர் தாஞ்சன் நிறுவனத்தின் சொத்து வாங்கியது தொடர்பாக வருமான வரித்துறை தொடர்ந்த வழக்கில், சசிகலா, இளவரசி, வி.என்.சுதா கரன் ஆகியோரை எழும்பூர் நீதி மன்றம் விடுவித்தது செல்லும் என்று சென்னை உயர் நீதிமன்றம் உத்தர விட்டது.
சென்னை மயிலாப்பூர் லஸ்ஸில் உள்ள அமிர்தாஞ்சன் நிறுவனத் தின் சொத்தினை 1999-ம் ஆண்டு சசிகலா, இளவரசி, வி.என்.சுதாகரன் ஆகியோர் வாங்கினர். வருமான வரிச் சட்டப்படி, ரூ.10 லட்சத்துக்கு மேற்பட்ட சொத்து வாங்கும்போது ஆட்சேபம் இல்லா சான்று வாங்க வேண்டும். இல்லா விட்டால், அதற்கான படிவத்தைத் தாக்கல் செய்ய வேண்டும்.ஆனால், இந்த விதியைப் பொருட் படுத்தாமல் சசிகலா, இளவரசி, வி.என்.சுதாகரன் மற்றும் 3 நிறு வனங்களின் பெயரில் 6 வகை யான விற்பனை ஒப்பந்தம் செய்து, பத்திரம் பதிவு செய்ததாக சசிகலா உள்ளிட்டோர் மீது வருமான வரித் துறை வழக்கு பதிவு செய்தது.
எழும்பூரில் உள்ள பொருளா தார குற்றவியல் நீதிமன்றம் இந்த வழக்கை விசாரித்து, சசிகலா உள்ளிட்ட 3 பேரை விடுவித்து 2004-ம் ஆண்டு உத்தரவிட்டது. இந்த உத்தரவை எதிர்த்து வருமான வரித்துறை உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தது. நீதிபதி பி.ராஜேந்திரன் இந்த மனுவை விசாரித்து, இவ்வழக்கில் சசிகலா உள்ளிட்ட மூன்று பேரை எழும்பூர் நீதிமன்றம் விடுவித்தது செல்லும் என்று உத்தரவிட்டார்.